நடிகை திரிஷாவா இது..? லியோ ஷூட்டிங்கிற்கு பின் வீக்கத்துடன் த்ரிஷாவின் முகம்..
பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார். 90ஸ்களில் கனவு கன்னியாக இருந்த இவர், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார். விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் திரிஷா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்நிலையில், சமூக வலைதளமான இன்ஸ்டா பக்கத்தில் 4 மில்லியன் பாலோவ்ஸ்களை பெற்றுள்ளார்.
தற்போது, பொன்னியின் செல்வன், லியோ போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் லியோ படத்தில் கமிட்டாகி காஷ்மீரில் கடந்த வாரம் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார். அப்போது இவரது புகைப்படங்கள் பலதும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் லான்ச் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திரிஷா சேலையில் வருகை தந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார். ஆனால், திரிஷா முகத்தில் சிறு வித்தியாசம் தெரிகிறது என்றும் முகம் வீங்கியபடி காணப்படுவதாக ரசிகர்கள் கூறி போட்டோக்களை கம்பேர் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
An embodiment of royalty even off-screen @trishtrashers #PonniyinSelvan2 #PS2 #PS2Trailer #PS2AudioLaunch #CholasAreBack#ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/xPMieohVKn
— Lyca Productions (@LycaProductions) March 29, 2023