PS - 2 விழாவில் அருகருகே அமர மறுத்த சிம்பு - திரிஷா.. லீக்கான போட்டோ இணையத்தில் வைரல்..!
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை, எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம். வசூலையும், பாசிட்டிவ் ரிவ்யூக்களையும் அள்ளி குவித்து வரும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகப் போகிறது என்கிற அறிவிப்புடன் வெளியான புதிய ப்ரமோவை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இரண்டாம் பாகத்தின் முக்கிய ட்விஸ்ட் காட்சியையே தற்போது ப்ரமோவில் ரிவீல் செய்து சொதப்பிவிட்டார் இயக்குநர் மணிரத்னம் என நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அருள்மொழி வர்மன் (ஜெயம் ரவி) மற்றும் வந்தியத்தேவன் (கார்த்தி) இருவரும் கடலில் மூழ்கி இறந்து போனதாக ட்விஸ்ட் வைத்து முடித்திருப்பார்கள். இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் ரிலீஸ் தேதி டீசர் வீடியோவுடன் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வரும் ஏப்ரல் 28ம் தேதி 2ம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் பொன்னியின் செல்வன் பட நடிகர், நடிகைகளுடன் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசனும், சிம்புவும் கலந்துகொண்டனர். கமல்ஹாசன் பங்கேற்பது முன்னரே அறிவிக்கப்பட்டாலும், நடிகர் சிம்பு சர்ப்ரைஸாக வந்து கலந்துகொண்டார்.
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்களுக்கு முன் வரிசை ஒதுக்கப்பட்டு, எந்த இருக்கை யாருக்கு என பெயரும் போடப்பட்டு இருந்தன. அந்த வகையில், நடிகர் சிம்புவுக்கும், திரிஷாவுக்கும் முதலில் அருகருகே இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. இதன் புகைப்படங்களும் வெளியானதால், விடிவி கார்த்தி - ஜெஸ்ஸி மீண்டும் இணைந்துவிட்டார்கள என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வந்தனர்.
ஆனால், விழா தொடங்கும் முன் சிம்பு அருகே போடப்பட்டு இருந்த திரிஷாவின் இருக்கையை மாற்றிவிட்டு கார்த்தியின் இருக்கையை சிம்பு அருகே போடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படமும் வெளியானதால், இரண்டையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் மீம் போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மாற்றம் நடந்தது ஏன், ஒன்றாக அமர்ந்தால் காதல் கிசுகிசு எதுவும் மீண்டும் கிளம்பி விடுமோ என்கிற பயத்தில் திரிஷா அமர மறுத்திருக்கலாம் அல்லது மீண்டும் வம்பு எதுக்கு என சிம்புவே தவிர்த்திருக்கலாம் என பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இதில் உண்மை எது என தெரியவில்லை.