சும்மா அதிருதுல்ல… தமிழகத்தில் லியோ வசூல் வேட்டை..!
ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் ஆனதில் இருந்தே தளபதி விஜய்யின் ‘லியோ’ பாக்ஸ் ஆபிஸை மிரட்டி வருகிறது. மேலும், படத்தின் இந்திய வசூல் நிலவரம் குறித்த புதிய தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இந்திய மற்றும் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. நேற்றைய தினம் உலகம் முழுவதும் இப்படம் ரூ.550 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக வெளியான செய்தி ரசிகர்கள் அனைவரையும் கிறங்கடித்தது.
பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் லியோ படம் தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, லியோ இதுவரை தமிழக பாக்ஸ் ஆபிஸில் மட்டும் 207 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் 100 கோடிக்கு மேல் சேர் கிடைத்துள்ளது.
Share this post