நிக்சனுடன் அஜால் குஜால்.. ஐஷு வால் கதறிய அம்மா பதிவிட்ட எமோஷனல் பதிவு..!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு சில போட்டியாளர்கள் சிகப்பு கொடி காண்பித்து மாயா அண்ட் கோ உடன் இருந்த கூட்டாளிகள் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியே அனுப்பினார்கள்.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பல கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில், ஐஷு மற்றும் நிக்ஸன் ரொமான்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனை பார்த்து கடுப்பான மக்கள் ஐஷுவை மிகவும் கேவலமாகவும், கொச்சையாகவும் பேசி விமர்சித்து வருகின்றனர்.
இதனால் மனவேதனை அடைந்த ஐஷுவின் அம்மா ஷைஜி அவரது சமூக வலைதள பக்கத்தில் ஐஷு குறித்து எமோஷனலாக ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அதில், எல்லாத்தையும் உணர்ந்து நீயாகவே இரு ஐஷு.
இந்த ஐஷு எனக்கு வேண்டாம். நாங்கள் எங்களுடைய ஐஷுவை தான் பார்க்க விரும்புகிறேன் என்று பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் அதை செய்ய நிக்ஸன் விடமாட்டான் என்று கிண்டலாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.