மன்னிப்பு கேட்ட நல்லவனாகிவிட முடியாது.. நிக்ஷன் பச்சையாக பொய் பேசறான்.. பதிலடி கொடுத்த வினுஷா..!
பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார் பிரதீப் ஆண்டனி. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.
இந்நிலையில், நேற்று வீட்டில் மற்ற போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொரு போட்டியாளரும் பேசிய வார்த்தைகளை டிவியில் ஒளிபரப்பு செய்து இதற்கான விளக்கத்தை அனைவரின் முன்னிலையிலும் கூற வேண்டும் என அறிவித்துள்ளனர்.
அந்த வகையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வினிஷா குறித்து தவறான வகையில், பேசிய நிக்சன் தன்னுடைய விளக்கத்தை கூறுகிறார். அதேபோல், ஜோவிகா தினேஷ் குறித்து பேசிய வார்த்தை ஐசு, மாயா குறித்து பேசிய வார்த்தை என பிக் பாஸ் அனைவருக்கும் செக் வைத்துள்ளார்.
இது குறித்து பேசி நிக்சன் தவறான அர்த்தத்தில் தான் பேசவில்லை எந்த உள்நோக்கமும் இதில் இல்லை, வினுஷாவுக்கும் இது தெரியும். அவரிடமும் நான் மன்னிப்பு கேட்டு விட்டேன் என்று பேசியிருந்தார். இது குறித்து, பேசிய வினுஷா உருவகேலி செய்வதற்கு தன்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும், சொன்னது அத்தனையும் பொய் வீட்டிற்கு வந்ததும் அவன் இப்படி எல்லாம் பேசியது எனக்கு தெரிந்தது. மேலும், இப்போது மன்னிப்பு கேட்டால் மட்டும் அவன் நல்லவனாகி விட முடியாது. என்னை கேலி செய்தது நிச்சயம் ஜோக் கிடையாது.
உரிமைக்குரல் தூக்கிய பெண்ணியவாதிகள் எங்கே போனார்கள். எனக்காக குரல் கொடுத்த விச்சுவுக்கு நன்றி என்று சரமாரியாக நடிகை வினுஷா கேள்வி கேட்டு பதிவிட்டுள்ளார்.