'தெரியாம இத பண்ணிட்டேன்.. Morph பண்ணி இப்டி அசிங்க படுத்திட்டாங்க..' கதறி அழும் சீரியல் நடிகை
விஜய் டிவியில் பல பிரபல சீரியல் தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை லக்ஷ்மி வாசுதேவன். தமிழ் சீரியல் தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், சரவணன் மீனாட்சி தொடர் மூலம் செம பேமஸ். மேலும், தற்போது பிரபல சேனல் தொடர்களில் அம்மா, அத்தை கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளபக்கங்களிலும் செம பிசியாக இருக்கும் இவருக்கு பாலோவர்ஸ் ஏராளம்.
சீரியலில் அம்மா ரோலில் நடித்து வந்தாலும், இணையத்தில் சற்று கவர்ச்சி தூக்கலாக மாடர்ன் உடைகளில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் லட்சுமி வாசுதேவன் தனது instagram பக்கத்தில் கண்ணீருடன் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் செப்டம்பர் 11ம் தேதி என்னுடைய வாட்ஸ் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உங்களுக்கு 5 லட்சம் பிரைஸ் விழுந்துள்ளது என்று போட்டிருந்தது. நான் அந்த லிங்கை கிளிக் செய்தேன் உடனடியாக ஒரு ஆப் டவுன்லோட் செய்யப்பட்டது.
பின்னர் இரண்டு மூன்று நாட்களுக்கு பின்னர் நீங்கள் ஐந்தாயிரம் ரூபாய் லோன் வாங்கி இருக்கிறீர்கள் முறையாக கட்டாவிட்டால் நாங்கள் உங்கள் போட்டோக்களை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டி மெசேஜ்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
இது குறித்து ஹைதராபாத் க்ரைம் பிரிவிற்கு நான் புகார் அளித்திருந்தேன். ஆனால் அந்த ஆப் டவுன்லோட் ஆகிய உடனேயே எனது போனை ஹாக் பண்ணி என்னுடைய போனில் இருந்து அனைத்து நம்பர்களையும் எடுத்துக்கொண்டு என்னுடைய ஃபோட்டோவை மார்பிங் செய்து நண்பர்கள், உறவினர்கள், எனது அப்பா அம்மா என அனைவருக்கும் அனுப்பி வைத்துவிட்டனர். என்னை தெரிந்தவர்களுக்கு நான் எப்படிப்பட்டவள் என தெரியும். நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் எனக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது.
தயவு செய்து இது போன்ற பேக் மெசேஜ் வந்தால் லிங்கை கிளிக் செய்யாதீர்கள். தேவையில்லாத லோன் ஆப்களை டவுன்லோட் செய்யாதீர்கள் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். பேக் மெசேஜ்கள் பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்வதற்காக போலீசார் தன்னை வீடியோ செய்து whatsapp ஸ்டேட்டஸ் அல்லது சோசியல் மீடியாவில் வெளியிடக் கூடியதால் தான் இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் லட்சுமி வாசுதேவன் கண்ணீருடன் கூறியிருந்தார். பிரபல சீரியல் நடிகை மார்ஃபிங் கும்பலிடம் சிக்கி உள்ளது குறித்த வீடியோ தற்போது பல பெண்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.