திரிஷா இப்பவும் இவ்ளோ ஸ்லிம் & க்யூட்'ஆ இருக்க காரணம் ? அவரே சொன்ன பதில் !
பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார். லேசா லேசா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், எனக்கு 20 உனக்கு 18, மௌனம் பேசியதே, சாமி உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். மேலும், 90ஸ்களில் கனவு கன்னியாக இருந்தவர்.
விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பு பயணத்தில் பெரிய மைல்கல்களாக மாறியது. விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.
39 வயது ஆன போதிலும், இன்னும் அதே அழகுடன் மக்கள் மனங்களை கவர்ந்து வருகிறார். நடிகை திரிஷா கர்ஜணை, சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன், ராம், ராங்கி போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, அண்மையில், ‘தி ரோட்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்கும் இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஷபீர் நடிக்கிறார். மேலும், தெலுங்கு வெப் சீரிஸில் திரிஷா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வெப் சீரிஸ் பெயர் ‘பிருந்தா’. விரைவில் இந்த வெப் சீரிஸ் வெளிவரவுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரிஷாவை திரையில் காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன்காக இப்படத்தின் நடிகர் - நடிகைகள் பல்வேறு பேட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், 39 வயதை கடந்துவிட்ட திரிஷா இன்னும் இவ்வளவு அழகாக இன்றைய நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதத்தில் இருப்பதற்கான டயட் காரணங்களை வெளிப்படுத்தியுள்ளார். மிக மிக கடுமையான உணவுத் திட்டங்களையும், நம்பிக்கையூட்டும் உடற்பயிற்சிகளையும் பின்பற்றுகிறாராம். எப்போதும் வெளி உணவை தவிர்க்கும் த்ரிஷா, பிரச்சினைகளை தவிர்க்க வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே உட்கொள்கிறாராம்.
திரிஷா தனது கைப்பையில் எப்பொழுதும் சில உணவுகளை வைத்திருப்பாராம். அவை ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் பழங்களாகும். தனது புதிய பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள், உடற்பயிற்சிகள், யோகா போஸ்களை மேற்கொண்டு தனது உடலை வித்தியாசமான சூழ்நிலையிலும் சண்டையிடுவதற்காக தனது நெகிழ்ச்சி தன்மை உடன் தகுதியையும் உயர்த்தும் வகையில் ஒவ்வொரு நாளும் தனக்கு புதிய சவால்களை அளித்து வருகிறார்.