உயிரோடு இருக்கும் போதே தனக்கு தானே கல்லறை கட்டிய பிரபல தமிழ் பட நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
80ஸ், 90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேகா. 1986ம் ஆண்டு வெளியான கடலோர கவிதைகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களின் நிறைய வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள், குணா உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டது. இவர் தற்போது துணை கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வருகிறார்.
மேலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரேகா, இறப்பதற்கு முன்பே தனக்கென கல்லறை ஒன்றை கட்டி பராமரித்து வருவதாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, தந்தை மீது அதிக பாசம் கொண்ட ரேகா இறந்த பின்னர் அவர் கூடவே இருக்க வேண்டும் என்பதற்காக தந்தை சமாதிக்கு அருகிலேயே தனக்கென ஒரு சமாதி கட்டி பராமரித்து வருகிறாராம். உயிரோடு இருக்கும் போதே ரேகா இப்படி செய்துள்ள விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.