நடிகர் SJ சூர்யாவிற்கு திடீரென Red Card..? அட கடவுளே இப்படிலாம் பண்ணினாரா..?

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. பிரபல இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த், சபாபதி உள்ளிட்டோருக்கு அசிஸ்டென்ட் ஆக பணியாற்றிய இவர், வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து, திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். அதனைத் தொடர்ந்து, விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் குஷி படத்தை இயக்கினார். இப்படமும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்னர், நியூ படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
கடந்த 5 வருடங்களாக, சிறந்த கதையாக இருந்தால் வில்லன் கதாபாத்திரத்திலும் ஏற்று நடித்து வருகிறார். இறைவி, ஸ்பைடர், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்நிலையில், எஸ்ஜே சூர்யாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட உள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் பேனரில் நடிக்க, எஸ்ஜே சூர்யாவுக்கு அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. சில காரணங்களால் எஸ்ஜே சூர்யா அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய்விடவே, அந்த அட்வான்ஸ் பணத்தை ஞானவேல் ராஜாவுக்கு திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த ஞானவேல் ராஜா, அட்வான்ஸ் தொகை உங்களிடமே இருக்கட்டும், பிறகு பார்த்துக்கலாம் என்று எஸ்ஜே சூர்யாவிடம் கூறியுள்ளாராம். எஸ்ஜே சூர்யா தற்போது பிஸியாகிவிட்டதால், அவரால் சொன்னபடி நடித்துக் கொடுக்க முடியவில்லையாம். இதனால், தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கேட்டுள்ளார் ஞானவேல்ராஜா.
இதற்கு எஸ்ஜே சூர்யா படம் நடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், தான் இப்போது வாங்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் எனக் கூறியதால் ஞானவேல் ராஜா ஷாக் ஆகி, இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி புகார் கொடுத்தால் எஸ்ஜே சூர்யாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.