விவாகரத்தாகி ஒரு வருடம் ஆன நிலையில் தனுஷின் 2ம் திருமணம் குறித்து வெளியான தகவல்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவர் பிரபல நடிகர் தனுஷ் அவர்களது மனைவியும் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.
தற்போது, சமீப காலமாக, கோவம் குறைந்து மீண்டும் தனுஷுடன் சேரும் முடிவில் ஐஸ்வர்யா இருப்பதாக கூறப்பட்டாலும், இருவர் தரப்பில் இருந்தும் இது வரை எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது.
அதன் பின்னர் இவர்களின் விவாகரத்து குறித்து இரு தரப்பினரும் எந்தவித கருத்தையும் வெளிகாட்டாமல் இருந்து வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன், ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அப்போது சமரச பேச்சுவார்த்தையில் விவாகரத்து முடிவை தற்காலிகமாக கைவிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது. ஆனால், அது குறித்த எந்த ஒரு அறிகுறியும் தற்போது வரை இல்லை. இந்நிலையில், சமீபத்தில் தன் பெற்றோருக்காக 150 கோடியில் போயஸ் கார்டன் வீட்டினை பரிசாக கொடுத்து கிரஹபிரவேசம் செய்திருந்தார்.
இதற்கிடையில் தனுஷ் விவாகரத்தாகி ஒரு வருடமாகிய நிலையில் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. எனினும் செல்வராகவன் சமீபத்திய பேட்டியொன்றில், சோனியா அகர்வாலை விவாகரத்து செய்தபின் மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இரு, கடவுள் உனக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறார் என்று கூறியதாக அவர் கூறியுள்ளார்.
இரண்டாம் திருமணம் வேண்டாம் என்று கூறிய தனுஷே, எப்படி அதை செய்வார் என்று தனுஷ் ரசிகர்கள் இந்த வதந்தியை மறுத்து வருகின்றனர்.