'வெற்றிமாறன் என்னை ஏமாத்திட்டாரு.. இதுனாலயே 'வடசென்னை' படத்த இன்னும் நா பாக்கல': விஜய் சேதுபதி வருத்தம்
ஆர் எஸ் இன்போடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம் விடுதலை. இத்திரைக்கதை பிரபல எழுத்தாளர் ஜெய மோகன் அவர்களின் துணைவன் என்னும் சிறுகதையில் இருந்து எடுக்கப்பட்டது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இப்படம் திண்டுக்கல், சத்தியமங்கலம் வனப்பகுதி போன்றவற்றில் ஷூட்டிங் எடுக்கப்பட்டது.
மலைவாழ் மக்கள் மற்றும் காவல்துறைக்கு இடையேயான பிரச்சனை குறித்த மைய கருவை கொண்டு இப்படம் உருவாவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், நேற்று விடுதலை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் தன்னை ஏமாற்றியதாக கூறியுள்ளார். அதில் அவர் பேசியதாவது : “8 நாள் இந்த படத்துல நடிக்க வாங்கனு கூட்டிட்டு போய் என்னை ஏமாற்றிவிட்டார் வெற்றிமாறன். நான் வட சென்னையில் நடிக்க வேண்டியது, மிஸ் பண்ணிட்டேன்” என கூறினார்.
அப்போது ரசிகர்கள் வட சென்னை பார்ட் 2 எப்போ என கத்தியதும், வெற்றிமாறன் இப்போ தான் அதற்கான கதை எழுதிக்கொண்டி இருப்பதாகவும் சீக்கிரமாகவே வந்திரும்.. யார் யாரோ யூடியூபில் ஏதேதோ சொல்றாங்க, நானும் சொல்லி வைக்கிறேன் சார்னு விஜய் சேதுபதி இதை கூறவே, வெற்றிமாறன் சிரித்தார்.
வட சென்னை படத்தை மிஸ் பண்ணிட்டோமே என்ற வருத்தத்தால் நான் அந்த படத்தை இதுவரை பார்க்கவே இல்லை. விடுதலை படத்திற்காக முதலில் 8 நாள் என்னிடம் கால்ஷீட் கேட்ட வெற்றிமாறன் கடம்பூர் அருகே ஒரு காட்டுப்பகுதியில் வைத்து ஷூட்டிங் நடத்தினார்.
அப்புறம் தான் எனக்கு தெரிந்தது 8 நாளும் எனக்கு ஆடிஷன் நடந்தது என்று. ஆடுகளம் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடந்தபோது இங்கு ஆடியன்ஸாக உட்கார்ந்து இருந்த நான். இன்று அதே மேடையில் வெற்றிமாறனுடன் உட்கார்ந்து இருப்பது அவ்ளோ சந்தோஷமாக உள்ளது என கூறினார் விஜய் சேதுபதி.