மினுமினுக்கும் நகைகளால் வேற லெவல் அழகில் ஜொலிக்கும் தமன்னாவின் தரமான க்ளிக்ஸ்..!

தமன்னா தனது 15வது வயதில் 2005 ஆம் ஆண்டு இந்தியில் சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற படத்தில் நடித்தார். அதே ஆண்டில், ஸ்ரீ திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டில் நுழைந்தார். சேகர் கம்முலா இயக்கிய ஹேப்பி டேஸ், அவருக்கு முதல் தெலுங்கு ஹிட் கொடுத்தது.
ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்கு முன்பு அவர் முதல் முறையாக திரையில் தோன்றினார். தமன்னா 10ம் வகுப்பு படிக்கும் போது சினிமாவில் அறிமுகமானார். ஸ்ரீ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானார். அப்போது தமன்னா தனது 15வது வயதில் மஞ்சு மனோஜுடன் நடித்தார்.
தமன்னா சமீபத்தில் ஒரு வெப் சீரிஸில் நடித்தார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்ற இந்த வெப் சீரிஸ் தற்போது Netflixல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த வெப் சீரிஸில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், இந்த வெப் சீரிஸுக்கு அவர் மிகவும் தைரியமாக படுக்கையறை காட்சிகளில் நடித்தார்.
தமன்னாவும் விஜய்யும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். விஜய் வர்மா தெலுங்கிலும் நடித்தார். குறிப்பாக நானி ஹீரோவாக நடித்த எம்சிஏவில் வில்லனாக நடித்தார். இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானவர் விஜய் வர்மா. சமீபத்தில், அமேசான் வெப் சீரிஸ் தஹாத் என்ற படத்தில் சைக்கோவாக நடித்தார்.
சமீபத்தில் ஜெயிலர் படத்தில் நடனமாடிய காவலா பாடல் பட்டி தொட்டி ரசிகர்களை ஈர்த்தது. அந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது நகை விளம்பரத்திற்காக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளுடன் சோசியல் மீடியாக்களில் மிகவும் வைரலாகி வருகிறது.