உயிருக்கு உயிரா காதலிச்சிருப்பேன்.. ஜோவிகாவின் அம்மாவுடன் திருமணம்..! (வீடியோ)
பிக்பாஸ் சீசன் 7 இன் தற்போதைய போட்டியாளரான பிரதீப் ஆண்டனி, வனிதாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7ல் தனது நடத்தையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் பிரதீப் ஆண்டனி. அவர் கவின் நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த நிகழ்ச்சி தற்போது 25வது நாளை எட்டியுள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 3 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாவா செல்லத்துரை உடல்நிலை காரணமாக வெளியேறியுள்ளார்.
முதலில் அனன்யா வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் பாவா செல்லத்துரை தானாக முன்வந்து வெளியேறினார். 3 வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். ஜோவிகா, மாயா, பிரதீப், விசித்ரா, யுகேந்திரன், கூல் சுரேஷ், நிக்சன், விஷ்ணு, சரவண விக்ரம் ஆகியோர் தற்போது பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர்.
இதனிடையே, பிக்பாஸ் சீசன் 3 இல் தனது நண்பர் கவினை பார்க்க பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரதீப் ஆண்ட்ரி மற்றும் வனிதா இடையேயான உரையாடல் தற்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜோவிகா ஆர்மி அதை வைரலாக்கி வருகிறது.
அந்த வீடியோவில், பிரதீப் ஆண்டனி வனிதாவிடம், “உங்களுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை என்றால், நீங்க ஒரு சின்ன பொண்ணாக இருந்திருந்தால் நான் உங்களை காதலித்திருப்பேன். உங்களைப்போல் ஒருத்திக்காக நிச்சயம் நான் இந்த உலகத்தை வெல்வேன்” உடனடியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷெரின், இப்போதும் அவர் சின்ன பொண்ணு தான் என்று கூறுகிறார். வனிதா “ஏம்மா நீ வேற” என்றார். இந்த வீடியோ தற்போது, வைரலாகி வரும் நிலையில், வனிதாவும் கண்ணில் பட்டதுடன், கிண்டலான ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
#PradeepAntony & #Vanitha Conversation In BiggBoss Season 3 😀 #BiggBossTamil #biggbosstamil7 #Jovika
— Tharani ᖇᵗк (@iam_Tharani) October 26, 2023
pic.twitter.com/MTgzrUjmRj