கருப்பு உடையில் சிலையாய்.. நடிகை தமன்னாவின் நச் போட்டோஸ்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்போது படிக்காதவன், அயன், பையா படத்தின் மூலம் பிரபலமானார்.
இவர் அஜித்துடன் இணைந்து வீரம் படத்தில் நடித்துள்ளார். மேலும் சுறா, பாகுபலி போன்ற படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தமிழில் போதிய பட வாய்ப்பு இல்லாததால் தனது கடையை பாலிவுட்டில் திறந்தார். அதனால், பாலிவுட்டில் நுழைந்த தமன்னா காதலனுடன் லஸ்ட் ஸ்டோரி என்னும், வெப் சீரிஸில் உச்சகட்ட கவர்ச்சியில் படுக்கை அறை காட்சியில் நடித்திருந்தார்.
சமீபத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திலும் சில காட்சிகளில் நடித்தார். அதில் அனிருத் இசையில் காவலா என்னும் பாடலுக்கு இவர் ஆடிய நடனம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. மேலும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு வந்தார். அதேபோல கருப்பு நிற உடையில் அவர் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடம் லைக்ஸ் பெற்று வருகிறது.
Jewels of India 💎💎💎 pic.twitter.com/CGJOAvb7sK
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) October 26, 2023