கமல் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன சிவகார்த்திகேயன்..!
சமீபத்தில் டி.இமான் அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகம் செய்து விட்டார். அவரால் அதை வெளியே சொல்ல முடியாது. இதனால் இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று கூறியிருந்தார்.
இந்த தகவல் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக விவாகரத்து பிரச்சனைகள் எழுந்தபோது அவரது குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயன்றார்.
அது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் இதற்கு எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை. தற்போது, சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தை உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில், படத்தின் பட்ஜெட் எதிர்பார்ப்பதை விட அதிக பட்ஜெட் ஆகிவிட்டது. இதனால், படக்குழுவிடம் செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.