பிரபல காமெடி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை லட்சுமி மேனன்.. வைரலாகும் போட்டோ..!

/lakshmi-menon-to-pair-up-with-yogi-babu-malai-

மலையாள படத்தில் 15 வயதிலேயே அறிமுகமாக தமிழில் சுதந்திர பாண்டியன் கும்கி போன்ற படங்களில் நடித்த மிகப்பெரிய வரவேற்பை நடிகை லட்சுமிமேனன் பெற்றவர். இவர் இதனை தொடர்ந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து காதல் கிசுகிசுகளில் சிக்கினார்.

/lakshmi-menon-to-pair-up-with-yogi-babu-malai-

அதெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்து வந்த லட்சுமிமேனனனுக்கு ஒரு சமயத்தில் பட வாய்ப்பு இல்லாமல் ஆளே அடையாளம் தெரியாமல் உடல் எடை கூடினார்.

பின்னர் மீண்டும் பட வாய்ப்பு கிடைக்க உடல் எடையை குறைத்து புலிகுத்தி பாண்டியன் படத்தில் நடித்தார். பின்னர், மழை, சப்தம் போன்ற படங்களில் தற்போது நடித்துவரும் இவர் இணையதளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

/lakshmi-menon-to-pair-up-with-yogi-babu-malai-

இதனிடையே, நடிகை லட்சுமிமேனன் நடிகர் யோகி பாபு நடிக்கும் மலை படத்தில் நடித்து வருகிறார். அதிலும், யோகிபாவுக்கு மனைவியாக நடித்துள்ளாராம். மலைப்படத்தில் சூட்டிங் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this post