அப்பாவும் இல்லை, இப்போது அம்மாவும் உயிரிழந்தார்… நீ இல்லாம நான் என்ன பண்ண போறேன்..!

bigg-boss-5-fame-akshara-reddy-mom-passed-away

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட நிகழ்ச்சி ஆன பிக் பாஸ் மூலம் நமக்கு பரிச்சயமானவர் அக்ஷரா ரெட்டி. இவர் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் மாடல் அழகியான கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமானார்.

bigg-boss-5-fame-akshara-reddy-mom-passed-away

இந்த நிகழ்ச்சியில், இவர் 80 நாட்கள் வரை உள்ளே இருந்தார். பின் குறைந்த வாக்குகள் பெற்று திடீரென்று அக்ஷரா ரெட்டி மற்றும் வருனும் டபுள் எவிக்ஷன் மூலம் ஒன்றாகவே வெளியேற்றப்பட்டனர்.

bigg-boss-5-fame-akshara-reddy-mom-passed-away

ஏற்கனவே, இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்ற கிசுகிசுக்களும் சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில், இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்று விளக்கம் கொடுத்திருந்தனர்.

bigg-boss-5-fame-akshara-reddy-mom-passed-away

இதனிடையே, அக்ஷராவின் தந்தை சுதாகர் ரெட்டி மெட்ராஸ் ஐஐடியில் படித்து தங்கப்பதக்கம் வென்றதோடு தொழில் அதிபராகவும் சிறந்து விளங்கினார். ஆனால், துரதிஷ்டவசமாக திடீரென அவர் மரணம் அடைந்து விட்டார்.

bigg-boss-5-fame-akshara-reddy-mom-passed-away

இதனையடுத்து அக்ஷரா தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். தனது அண்ணா மற்றும் அம்மாவுடன் வசித்து வந்தார். இப்போது, அவரது அம்மா உயிருடன் இல்லை. இதனால், அக்ஷரா மிகவும் மன உளைச்சலில் இருப்பதால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Share this post