Room-க்கும் வந்து, ரேட் என்னன்னு கேக்குறான்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஓபன் டாக்..!
சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி. குணசேகரின் தங்கையான ஆதிரையை திருமணம் செய்துள்ள கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அயலி தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை காயத்ரி நடித்திருந்தார். இதனிடைஅய, தனக்கு நடந்த மோசமான அனுபவங்கள் பற்றி தற்போது பேசியுள்ளார்.
அதாவது, அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்ததாகவும், அப்போது குடிபோதையில் ஒருவர் தன்னை பின்தொடர்ந்து ஹோட்டல் ரூம் வரைக்கும் வந்து ரேட் என்னன்னு சொல்லு என்றார்.
நான் கல்லூரி மாணவி என்று சொல்லியும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சத்தம் போட்டு கத்தியதில் பக்கத்து அறையில் இருந்தவர்கள் அந்த குடிகாரனை மிரட்டி அனுப்பினார்கள். இந்த மோசமான அனுபவத்தை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன் என்று நடிகை காயத்ரி தெரிவித்துள்ளார்.