குழந்தை இருக்கு.. ப்ளீஸ் விட்டுடுங்க.. பல ஆண்டு ரகசியத்தை உடைத்த மீனா..!
மீனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நுழைந்து நட்சத்திர நடிகையாக மாறினார். பன்மொழி நடிகையான மீனா ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் அதிகம் தேடப்பட்டார். மீனாவின் கால்ஷீட் கிடைக்க தயாரிப்பாளர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பெரிய நட்சத்திர நடிகையாக இருந்தார். இதனால், தென்னிந்தியாவின் கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திர நடிகர்களின் படங்களிலும் நடிகை மீனா நடித்தார்.
47 வயதான மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் நுழைந்ததிலிருந்து இன்று வரை திரையுலகில் 40 வருடங்களை நிறைவு செய்துள்ளார். மீனா நடிகை, டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். நல்ல நடிப்பால்தான் அவர் மேலும் பிரபலமடைந்தார்.
இதனிடையே, நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான நோயால் அவதிப்பட்டு கடந்த ஆண்டு இறந்தார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.
இதனிடையே, மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இது குறித்த நேர்காணல் பேட்டி ஒன்றில் அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து மீனா பேசியுள்ளார். பல நாட்கள் முடிந்து எனக்கு கம் பேக் தந்த படம் திரிஷ்யம்.
அந்த கதை கேட்ட பிறகு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்த காரணத்தால் நான் தயாரிப்பாளரிடம் எனக்கு இப்போது இந்த படம் பண்ண முடியாது ப்ளீஸ் விட்டுடுங்க, ரொம்ப கஷ்டம், எனக்கு இரண்டு வயதில் குழந்தை இருக்கிறது என தெரிவித்தாராம்.
அந்த நேரத்தில், தயாரிப்பாளர் ஓகே என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாராம். மீண்டும், சில நாட்கள் கழித்து வந்து நீங்கள் அல்லாமல் வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்க முடியாது.
நீங்களே பண்ணினால் நன்றாக இருக்கும். உங்களுக்கு என்ன வசதி வேண்டுமானாலும் செய்து தருகிறோம். தயவு செய்து வாங்க என்று சொன்னார்கள். அப்படித்தான் அந்த படத்தில் நடித்து கொடுத்தேன் என்று மீனா பேசியுள்ளார்.