மகன்.. மகளை போட்டோ எடுக்க அனுமதிக்காத சூர்யா.. கோபமடைந்த சூர்யா? வைரலாகும் வீடியோ !

Suriya stops photographers to take photo of his son and daughter

நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட பிரபல ஜோடி சூர்யா - ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.

Suriya stops photographers to take photo of his son and daughter

2006ம் ஆண்டு இவர்கள் திருமணத்திற்கு முன்னர் இணைந்து நடித்து வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இருவீட்டாரின் பெயரில் சம்மதம் பெற்று திருமணம் செய்தனர்.

Suriya stops photographers to take photo of his son and daughter

இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்து வருகிறார் ஜோதிகா.

Suriya stops photographers to take photo of his son and daughter

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா, தனது மனைவியுடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதன் மூலம் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.

Suriya stops photographers to take photo of his son and daughter

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா, இரு குழந்தைகள் தியா மற்றும் தேவ் என அனைவரும் ஒரு நிகழ்ச்சிக்காக ஹோட்டல் ஒன்றுக்கு சென்று இருந்தனர். அவர்கள் திரும்பும் போது அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் அவர்களை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் கோபமடைந்த சூர்யா எனது மகன் மகளை மட்டும் போட்டோ எடுக்காதீர்கள் ப்ளீஸ் என கேட்டுள்ளார்.

Suriya stops photographers to take photo of his son and daughter

அதற்கு அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் நீங்கள் மற்றும் ஜோதிகா மேம் ஒரு போட்டோ கொடுங்கள் என்று கேட்டார். சூர்யா, தன் மகன், மகளை காரில் ஏற்றி விட்டு, அவர்கள் கேட்டுக் கொண்டவரே சூர்யாவும் அவர் மனைவியும் ஜோதிகாவும் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தனர். இந்த வீடியோ தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Share this post