விக்ரம் படத்தை பார்த்துவிட்டு லோகேஷுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்.. வெளியான சூப்பர் தகவல் !

Vijay appreciated lokesh after watching vikram movie

4 வருடங்களுக்கு பிறகு, உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

Vijay appreciated lokesh after watching vikram movie

இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 450 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துணை இயக்குனர்களுக்கு பைக், இயக்குனர் லோகேஷுக்கு கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் என பரிசளித்த தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குனருமான கமல், விக்ரம் சக்சஸ் மீட்டில் அசைவ சமபந்தியில் விருந்து நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது.

Vijay appreciated lokesh after watching vikram movie

இப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தை பார்த்துவிட்டு பல திரையுலக நட்சத்திரங்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். படம் வெளியாகி 2 மாதங்கள் ஆன நிலையிலும், இப்படத்தின் vibes இன்னும் குறையவில்லை என்பதே உண்மை.

Vijay appreciated lokesh after watching vikram movie

இந்நிலையில், தற்போது நடிகர் விஜய், விக்ரம் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ‘Mind Blowing’ என மெசேஜ் அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக விஜய் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay appreciated lokesh after watching vikram movie

Share this post