கோவில் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய சூரி.. திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய வீடியோ வைரல் !

Soori dance in temple festival video getting viral

தமிழ் திரையுலகில் விவேக், சந்தானம் வரிசையில் நகைச்சுவை நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூரி. 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இவர் பரோட்டா சாப்பிடும் சீன் மூலம் பிரபலம் அடைந்த இவர், பரோட்டா சூரி என பிரபலம் அடைந்தார். இதற்கு முன்னர் பல திரைப்படங்களில் பின்னணி நடிகராக நடித்துள்ளார்.

Soori dance in temple festival video getting viral

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து, சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரஜினி முருகன் என பல திரைப்படங்கள் இவரை மிக பிரபலபடுத்தியது. பெரும்பாலும், சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிக்கும் சூரி கதாபாத்திரம் மிக பேமஸ் ஆகிவிடும்.

Soori dance in temple festival video getting viral

அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், டான் போன்ற திரைப்படங்களில் நடித்து வெளியாகி இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது விருமன், விடுதலை போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Soori dance in temple festival video getting viral

இந்நிலையில், நடிகர் சூரி மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் கோவில் விழாவில் கலந்துகொண்டுள்ளார். அங்கு ஊர் பொதுமக்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடி மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Share this post