வைரலாகும் 'விக்ரம்' படத்தில் சூர்யா பெயர் & மாஸ் சீன்.. நீளமான தாடி.. வித்தியாசமான கெட்டப்..

Suriya photos from vikram movie getting viral on social media

4 வருட இடைவெளிக்கு பிறகு, கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் இயக்குனர். அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

Suriya photos from vikram movie getting viral on social media

தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Suriya photos from vikram movie getting viral on social media

இப்படத்தில், கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய பாகத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் இப்படத்தின் டர்னிங் பாய்ண்ட் என கூறி இருந்தனர்.

Suriya photos from vikram movie getting viral on social media

விக்ரம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியாகியுள்ளது. படத்தில் பகத் பாசில் அமராகவும், விஜய் சேதுபதி சந்தானமாகவும் நடித்துள்ளதாக தெரிவித்த படக்குழு, சூர்யாவின் கேரக்டரை சஸ்பென்ஸாக வைத்திருந்தது.

Suriya photos from vikram movie getting viral on social media

இந்நிலையில், அவரின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் சூர்யா இப்படத்தில் ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் நீண்ட தாடியுடன் வித்தியாசமான கெட் அப்பில் நடிகர் சூர்யா கெத்தாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Suriya photos from vikram movie getting viral on social media

Suriya photos from vikram movie getting viral on social media

Suriya photos from vikram movie getting viral on social media

Suriya photos from vikram movie getting viral on social media

Share this post