'நீங்களும் உங்க உடம்ப பாத்துக்கோங்க'.. ரஹ்மானுக்கு பிரபல பாடகி போட்ட ட்வீட்.. குழம்பிப்போன ரசிகர்கள் !

Popular singer shwetha mohan tweets to take care of arrahman health

பிரபல பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத், பிரபலமாக கேகே என அழைக்கப்படுபவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி என அனைத்து மொழிகளிலும் நிறைய பிரபல பாடல்களை பாடியவர்.

Popular singer shwetha mohan tweets to take care of arrahman health

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தெற்கு கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சாவில் ஒரு கல்லூரி ஏற்பாடு செய்திருந்த கச்சேரியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஃபர்ப்பாம் செய்து கொண்டிருந்தார்.

Popular singer shwetha mohan tweets to take care of arrahman health

அப்போது திடீரென அசௌகரியமாக உணர்ந்த கேகே மைக்கை அருகில் உள்ளவரிடம் கொடுத்துவிட்டு மேடையின் பின்பக்கமாக கைத்தாங்கலாக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் ஹோட்டலுக்கு சென்ற அவர் மாடிப்படிகளில் மயக்கமுற்று விழுந்ததை அடுத்து கொல்கத்தா CMRI மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

Popular singer shwetha mohan tweets to take care of arrahman health

53 வயதான கிருஷ்ணகுமார் குன்னத், தமிழில் விஜய், அஜித், பிரபு தேவா உள்ளிட்டோரின் 90ஸ் ஹிட் பாடல்களை பாடியவர். ஸ்ட்ராபெரி கண்ணே , உயிரே உயிரே போன்ற பாடல்களுக்குப் பெயர் பெற்றவர். 3 தலைமுறை ரசிகர்களை ஈர்த்தவர். இவரது இறப்பு திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

Popular singer shwetha mohan tweets to take care of arrahman health

இந்நிலையில், ஏ ஆர் ரஹ்மானின் உடல்நிலை குறித்து பிரபல பாடகி பதிவிடவே, ரசிகர்கள் அவரை நலம் விசாரிக்கும் பதிவு சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Popular singer shwetha mohan tweets to take care of arrahman health

பாடகர் கே கே, ஏ ஆர் ரகுமான் அவர்களின் நெருங்கிய நண்பர் ஆவார். கேகே மறைவிற்கு ரஹ்மான் ட்வ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், ‘என்ன அவசரம் நண்பா’ என பதிவிட்டு இருக்கிறார்.

Popular singer shwetha mohan tweets to take care of arrahman health

இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிரபல பாடகி ஸ்வேதா, ‘சார் தயவு செய்து உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். நன்றாக தூங்குங்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.

Popular singer shwetha mohan tweets to take care of arrahman health

இவரைத் தொடர்ந்து, பலரும், ஏ.ஆர்.ரகுமான் சார் உங்கள் நலன் எங்களுக்கு மிக முக்கியம். ஓய்வெடுங்கள், தூக்கம் ரொம்ப முக்கியம். அதிகம் வேலை செய்யாதீர்கள், நன்றாக சாப்பிடுங்கள் என அக்கறையுடன் பதிவிட்டு வருகிறார்கள். தற்போது ஏ ஆர் ரகுமான் உடல்நிலை குறித்து ரசிகர்கள் போடும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Popular singer shwetha mohan tweets to take care of arrahman health

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். அனைத்து மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்து வரும் ரஹ்மான், இசைப்புயலாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular singer shwetha mohan tweets to take care of arrahman health

Share this post