இந்த சஸ்பென்ஸ சொல்லவே இல்ல.. விக்ரம்'ல இந்த சீன்ல எல்லாம் கைதி reference தான் ! லோக்கி வேற லெவல்யா நீ !

Vikram movie has lot of kaithi reference information getting viral

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். தமிழில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Vikram movie has lot of kaithi reference information getting viral

பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, ரமேஷ் திலக், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, மஹேஸ்வரி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Vikram movie has lot of kaithi reference information getting viral

மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் ஆரவாரத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது. போதைப்பொருள் தொழில் செய்யும் விஜய் சேதுபதி, சீக்ரெட் ஏஜென்ட்டாக கமல் ஹாசன், கமல் வளர்ப்பு மகனாக காளிதாஸ், உளவாளியாக பகத் பாசில் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை நேர்த்தியாக தந்திருக்கின்றனர்.

Vikram movie has lot of kaithi reference information getting viral

ஆக்ஷன், செண்டிமெண்ட், Gun ஹண்ட்லிங் என ஒவ்வொரு காட்சியும் திரை தீப்பிடிக்கிறது. இன்டெர்வெல் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. சூர்யா நடித்திருக்கும் கடைசி 20 நிமிட காட்சிகள் மனதில் ஊன்றி நிற்கிறது.

Vikram movie has lot of kaithi reference information getting viral

படத்திற்கு ரிலீஸ் முன், லோகேஷ் கைதி படத்தின் reference அதிகம் படத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், கைதி படத்தை ஒரு முறை பார்த்துவிட்டு விக்ரம் படம் பார்க்குமாறு கூறியிருந்தார். அதற்கு அர்த்தம் நமக்கு தற்போது புரிகிறது.

Vikram movie has lot of kaithi reference information getting viral

கைதியாக இருந்த டில்லி ரிலீஸாகி, தன் மகளை காண காவல்துறை அதிகாரிகளை காப்பாற்றி பின்னர் பல சிக்கல்களுக்கு பிறகு மகளை காண்கிறார்.

Vikram movie has lot of kaithi reference information getting viral

பின்னர், மகளுடன் வேறொரு ஊருக்கு சென்ற டில்லி தான், விக்ரம் படத்தின் சர்ப்ரைஸ் எலிமெண்ட். விக்ரம் - ரோலெக்ஸ் - அடைக்கலம் - அன்பு - டில்லி - பிஜாய் என அனைவரையும் ஒரு நேர்கோட்டில் கொண்டு வந்து வைத்த லோகேஷ் கனகராஜ் விக்ரம் 2 & கைதி 3 படத்திற்கு ஒரு லீட் கொடுத்து முடித்தது அல்டிமேட்.

Vikram movie has lot of kaithi reference information getting viral

Vikram movie has lot of kaithi reference information getting viral

Vikram movie has lot of kaithi reference information getting viral

Share this post