'முதல் 29 நிமிஷம் புல்லரிக்கும்'.. வியந்து புகழ்ந்து பாராட்டிய சூப்பர்ஸ்டார் ! வைரலாகும் வீடியோ !

Superstar rajinikanth praises parthiban for iravin nizhal movie

தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.

Superstar rajinikanth praises parthiban for iravin nizhal movie

80ஸ்கள் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றதோடு தலைவர் என ரசிகர்கள் அழைக்கும்படி தனது நற்பண்புகளையும் கொண்டுள்ளவர். பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

Superstar rajinikanth praises parthiban for iravin nizhal movie

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. தற்போது, இவர் நடிப்பில் உருவாகி வரும் தலைவர்169 திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Superstar rajinikanth praises parthiban for iravin nizhal movie

வித்தியாசமான முயற்சி, திரைக்கதை என திரைப்படங்கள் வெளியானால் அதனைப்பார்த்து படக்குழுவை அழைத்து பாராட்டுவது, பாராட்டி பதிவிடுவது என சூப்பர்ஸ்டார் செய்வது வழக்கம். அந்த வகையில், இரவின் நிழல் படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று திரையிடப்பட்டது. இதனை புகழ்ந்து பாராட்டியுள்ளார் சூப்பர்ஸ்டார். அந்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

Superstar rajinikanth praises parthiban for iravin nizhal movie

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Superstar rajinikanth praises parthiban for iravin nizhal movie

படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பார்த்த ரசிகர்கள், இப்படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என பாராட்டி வந்தனர். படத்தின் முதல் 30 நிமிடங்கள் படத்தின் மேக்கிங் வீடியோ, அதற்கு பிறகு இன்டர்வெல் தொடர்ந்து, 96 நிமிடங்கள் Non linear Single shot ல் எடுக்கப்பட்ட திரைப்படம்.

Superstar rajinikanth praises parthiban for iravin nizhal movie

50 வயதாகும் ஒருவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், அதன் இருண்ட பக்கங்களை திரும்பிப் பார்ப்பது தான் படத்தின் கதை. இதை த்ரில்லிங், சுவாரஸ்யம் கலந்து ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக சொல்லி இருக்கின்றார்களாம்.

இந்நிலையில் இப்படம் குறித்து ரஜினி பேசிய வீடியோ ஒன்றை வெளியாகியுள்ளது. அதில், பார்த்திபன், ஒரு வித்தியாசமான முயற்சிகள் செய்ய வேண்டும் என்று எப்போதும் துடிக்கும் ஒரு கலை ரசிகன். Non linear Single shot, உலகத்திலேயே இதுவரை யாரும் எடுத்ததே கிடையாது. 29 நிமிடங்கள் இந்த படத்தை எப்படி எடுத்தார்கள் என காட்டி இருக்காங்களாம். புல்லரிக்குமாம். இந்த படம் கண்டிப்பாக நல்லா போகும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Share this post