அறிவிப்பிற்கு முன்பே 'Wikipedia' பக்கத்தில் லீக்கான ‘தளபதி67’ டைட்டில்.. ஏன் இப்டி ?

Thalapathy67 title leaked on wikipedia page before official announcement

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ். எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

Thalapathy67 title leaked on wikipedia page before official announcement

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது.

Thalapathy67 title leaked on wikipedia page before official announcement

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

Thalapathy67 title leaked on wikipedia page before official announcement

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் 3 போஸ்டர்கள் விஜயின் பிறந்த நாளன்று வெளியானது.

Thalapathy67 title leaked on wikipedia page before official announcement

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

Thalapathy67 title leaked on wikipedia page before official announcement

அதன்படி, இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாகவும், இயக்குனர் ரத்னகுமாரும் இப்படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படம் குறித்த மேலும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Thalapathy67 title leaked on wikipedia page before official announcement

அதன்படி இப்படத்திற்கு ‘நான் வாழும் உலகம்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் எடிட்டராக பணியாற்ற உள்ள பிலோமின் ராஜின் விக்கிபீடியா பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளதால் இதுதான் தளபதி 67 படத்தின் டைட்டிலாக இருக்கும் என கூறி வருகின்றனர். தளபதி படத்துக்கு இப்டி டைட்டிலா என குழம்பி போயுள்ளனர்.

Thalapathy67 title leaked on wikipedia page before official announcement

Share this post