'உன் மேல இருக்க அன்பு & மரியாதை'ல' - நடிகை நக்ஷத்திரா பதிவிற்கு கிண்டலாக பதிவிட்ட ஸ்ரீநிதி ! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

Sreenidhi comments for nakshatra wedding and her post getting viral

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த 7C சீரியல் தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீநிதி. இதனைத் தொடர்ந்து, பகல் நிலவு, வள்ளி போன்ற சீரியல் தொடர்களில் நடித்து வந்தார். இறுதியாக, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி என்னும் பிரபல தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

Sreenidhi comments for nakshatra wedding and her post getting viral

சின்னத்திரையில் பிரபலமாக நடித்து வந்த ஸ்ரீநிதி, பிரபல சின்னத்திரை நட்சத்திரங்களுடன் புகைப்படங்கள் எடுப்பது வெளியே செல்வது மேலும் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து சாதாரணமாக இவர் கூறிய கருத்து அவரை பெரும் அளவில் பாதித்து விட்டது.

Sreenidhi comments for nakshatra wedding and her post getting viral

அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களிலும், மெசேஜ் மூலமாகவும் மோசமாக கமெண்ட் செய்தும் பேசி அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியதாக, அவர் சந்தித்த இன்னல்கள், மனப்போராட்டங்கள் குறித்து வீடியோ பதிவிட்டிருந்தார்.

Sreenidhi comments for nakshatra wedding and her post getting viral

இந்நிலையில், சிம்புவை திருமணம் செய்ய ரெடி. எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் சிம்பு. எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்! சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என சிம்பு வீட்டு வாசலில் இருந்து ஸ்டேட்டஸ் பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பி வந்தார்.

Sreenidhi comments for nakshatra wedding and her post getting viral

தனது தந்தையிடம் ‘நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா. சிம்பு தான் என்ன லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன டார்ச்சர் பண்றாரு’ என அவர்கள் செய்த உரையாடலை பதிவிட்டிருந்தார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் அவர் நிஜமாகவே சிம்புவை லவ் பண்றாரா இல்ல பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறாரா என்பது தெரியாமல் குழம்பிப்போய் இருந்தனர்.

Sreenidhi comments for nakshatra wedding and her post getting viral

இதனைத் தொடர்ந்து, நடிகை ஸ்ரீநிதி இன்ஸ்டா லைவ் வீடியோவில் அவரது தோழி மற்றும் நடிகையான நக்ஷத்திரா தவறான ஒருவருடன் திருமண பந்தத்தில் இணையவிருக்கிறார் என்றும், விஜே சித்து தவறான ரிலேஷன்ஷிப்பை தேர்வு செய்ததால் அவருக்கு நடந்தது நக்ஷத்திராவுக்கும் நடக்கலாம். நான் இப்போதே இதை சொல்வது அதனால் தான்.

Sreenidhi comments for nakshatra wedding and her post getting viral

நக்ஷத்திராவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அவர் இறந்தால் கூட அவரது சாவுக்கு நான் செல்லமாட்டேன் என கூறி ஸ்ரீநிதி பகீர் கிளப்பி வந்தார். இவரது இந்த பதிவுகளுக்கு விளக்கமளித்த நக்ஷத்திரா, ஸ்ரீநிதி depressionல இருக்க நாள இப்டி பேசுறா என கூறியிருந்தார். மேலும், ஸ்ரீநிதியின் தாயாரும் இதுகுறித்து நிறைய பேட்டி கொடுத்திருந்தார்.

Sreenidhi comments for nakshatra wedding and her post getting viral

பிரபல ஆன்லைன் சேனலுக்கு பேட்டியளித்த ஸ்ரீநிதி, ஒரு சேனல் ஹெட் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாகவும். தாம் அதிலிருந்து தப்பிவிட்டதாக கூறி பகீர் கிளப்பி இருந்தார். பின்னர், சிம்பு பற்றி நிறைய பேசி இருந்தார். இதையடுத்து, அவரது அம்மா அளித்த பேட்டியில், ஸ்ரீநிதி டிப்ரஷனில் இருப்பதால் இப்படியெல்லாம் பேசுவதாகவும், அவரை யாரும் திட்ட வேண்டாமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

Sreenidhi comments for nakshatra wedding and her post getting viral

பின்னர், ஸ்ரீநிதி சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. விரைவில் அவர் மீண்டும் வீடு திரும்புவார் என நெருங்கிய நண்பர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென ஸ்ரீநிதி மருத்துவமனையில் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்டுவிட்டதாகவும், மன அழுத்தத்திற்கான சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என பல விதமாக தகவல் வெளியே வந்தது.

Sreenidhi comments for nakshatra wedding and her post getting viral

இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை நக்ஷத்திராவுக்கு திருமணம் முடிந்து இருக்கிறது. தனது திருமணம் குறித்த அறிவிப்பை ஜூலை மாதம் அறிவிப்பேன் என அவர் கூறியிருந்த நிலையில் நக்ஷத்திராவுக்கும் - விஸ்வா என்பவருக்கும் திடீர் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

Sreenidhi comments for nakshatra wedding and her post getting viral

நக்ஷத்திராவைத் தூக்கி வளர்த்த தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும், பள்ளிப் படிப்பு வரை நக்ஷத்திரா அந்தத் தாத்தாவின் வீட்டிலிருந்தே வளர்ந்தவர். அந்தத் தாத்தாவின் ஒரே ஆசை நக்ஷத்திராவை மாலையும் கழுத்துமாகப் பார்த்து விட வேண்டும் என்பதுதான். அதனால தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குடும்பக் கோயிலில் வைத்து பெரியவர்கள் முன்னிலையில் நக்ஷத்திரா – விஷ்வா திருமணம் நடந்து முடிந்தாக கூறப்படுகிறது. நக்ஷத்திரா வின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிகிறது.

Sreenidhi comments for nakshatra wedding and her post getting viral

இப்படி ஒரு நிலையில் நக்ஷத்திராவின் திருமணத்திற்கு வாழ்த்து சொல்லும் வகையில் ஸ்ரீநிதி தனது இன்ஸ்டா பக்கத்தில் நக்ஷத்திராவின் திருமண புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘உன்மீது இருக்கும் அன்பு மற்றும் அக்கறையுடன் ‘வாழ்க வளமுடன்’ என்றும் அன்புடன் உங்கள் SSR’ என்று பதிவிட்டுள்ளார்.

Sreenidhi comments for nakshatra wedding and her post getting viral

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நக்ஷத்ராவின் தோழியும் சீரியல் நடிகையுமான நிவாஷினி திவ்யா, நக்ஷத்திரா மற்றும் அவரது வருங்கால கணபவருடன் எடுத்துக்கொண்டபுகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் ‘Family’ என குறிப்பிட்டு ஷேர் செய்து இருந்தார். இந்த புகைப்படத்திற்கு கேலி செய்யும் விதமாக கிண்டலாக சிரிக்கும் எமோஜி ஒன்றை போட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post