எவன்டா சொன்னது எனக்கு கல்யாணம்னு.. அதிரடியாக பேசிய ஸ்ரீ திவ்யா..!
தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் நடிகை ஸ்ரீதிவ்யா அறிமுகமானவர். இதன்பின்னர், ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால், அதன்பின் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில், கடைசியாக தமிழில் 2017 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர், ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது விக்ரம் பிரபுவுடன் ரைடு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற பத்தாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு திருமணம் என வதந்தி பரவி உள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய நடிகை ஸ்ரீதிவ்யா சமீப காலமாக தன்னுடைய திருமணம் குறித்து சில வதந்திகள் வருகிறது. தான் யாரையும் காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்ய போவதாக செய்திகள் வெளியானது. இது அனைத்தும் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்று ஸ்ரீதிவ்யா தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தெரிவித்து இருக்கிறார்.