"நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம்.. இறைவன் இருக்கிறான்" நடிகர் விஷ்ணு விஷால் தந்தை மீதான புகார் குறித்து நடிகர் சூரி கவலை.!

Soori speaks about problem and case with vishnu vishal father in producer amount issue

தமிழ் திரையுலகில் விவேக், சந்தானம் வரிசையில் நகைச்சுவை நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூரி. 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இவர் பரோட்டா சாப்பிடும் சீன் மூலம் பிரபலம் அடைந்த இவர், பரோட்டா சூரி என பிரபலம் அடைந்தார். இதற்கு முன்னர் பல திரைப்படங்களில் பின்னணி நடிகராக நடித்துள்ளார்.

Soori speaks about problem and case with vishnu vishal father in producer amount issue

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து, சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரஜினி முருகன் என பல திரைப்படங்கள் இவரை மிக பிரபலபடுத்தியது. பெரும்பாலும், சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிக்கும் சூரி கதாபாத்திரம் மிக பேமஸ் ஆகிவிடும்.

Soori speaks about problem and case with vishnu vishal father in producer amount issue

அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், டான் போன்ற திரைப்படங்களில் நடித்து வெளியாகி இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது விருமன், விடுதலை போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Soori speaks about problem and case with vishnu vishal father in producer amount issue

இவர் மதுரையில் பிரபல ஹோட்டல் நடத்தி வருவது குறித்து அனைவரும் அறிவர். மேலும், மதுரையில் நிறைய இடத்தில அந்த ஹோட்டல்களில் கிளைகளும் இயங்கி வருகிறது. தரம், சுவை, விலை அனைத்தும் நன்றாக இருப்பதன் காரணத்தால் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு கிளையை திறப்பது குறித்து அமைச்சர் கேட்டதற்கு அது குறித்து விரைவில் ஆலோசிப்பதாக சூரி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார்.

Soori speaks about problem and case with vishnu vishal father in producer amount issue

அப்போது, நிருபர் ஒருவர், விஷ்ணு விஷால் தந்தை மீதான புகார் குறித்து கேட்டபோது, இறைவனுக்கு இணையாக நீதிமன்றத்தை நினைப்பதாகவும், நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தது என்றும், இதுகுறித்து போலீஸ் மற்றும் நீதிமன்றம் விசாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பேட்டி வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

Share this post