நயன்தாராவை நடிக்க வெச்சது ரொம்ப தப்பா போச்சு.. அதிருப்தியில் O2 படக்குழு

தென்னிந்திய திரையுலகில் டாப் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, கோலமாவு கோகிலா, டோரா போன்ற படங்கள் மூலம் தனது தனித்துவத்தை நிரூபித்தார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்த பிறகு, தற்போது, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்து முடித்திருக்கும் படம் ‘O2’ .
ஜி எஸ் விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இப்படத்தை டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
ஆக்சிஜன் என்பது எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துரைக்கும் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள்.
நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதை கூறும் படம் “ஓ-2” என சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா பார்டர் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” இப்படத்தில் 8 வயது மகனுக்கு அம்மா பார்வதியாக நயன்தாரா நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.
இதில் யூடியூப் புகழ் ரித்விக் நயன்தாரா மகனாக நடித்துள்ளார். இதன் டீசர் வீடியோ மற்றும் சுவாசமே என்னும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு பெரிய பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் எப்படி தவிக்கின்றனர் என்கிற பாணியில் கதை உருவாகி இருப்பதை டிரைலர் உண்ர்த்துகிறது. இதில் அம்மாவும் மகனுமாக காட்டப்பட்டுள்ள சீன்கள், பள்ளத்தில் சிக்கும் மனிதர்களின் மனோநிலை என அனைத்தும் எதார்த்தமாக காட்டப்பட்டுள்ளது.
ட்ரைலர் வீடியோவே நெஞ்சை பதற வைக்கும் அளவிற்கு அமைந்தது. இப்படம் கடந்த ஜூன் 17ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி இந்த கதை இருந்தாலும் சுவாரஸ்யம் சற்றுக் குறைவாகவே இருந்ததாக விமர்சனங்கள் வெளியானது.
தற்போது நயன்தாராவுக்கு பாலிவுட் உட்பட ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருவதாலும் படங்களில் நடிக்க இவ்வாறு கண்டிஷன் போட்டு வருகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்துக்கு நயன்தாராவை செலக்ட் பண்ணது ரொம்ப தப்பா போச்சு என படக்குழுவினர் நினைத்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதற்கான காரணம் என்னவென தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தில் பஸ் மண்ணுக்குள் புதையும் போது கண்ணாடி உடைந்து நயன்தாரா மீது மண் படுவது போன்ற காட்சி எடுக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். ஆனால் நயன்தாரா என் மீது மண்ணெல்லாம் படக்கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம். மேலும் ஒரு சில கண்டிஷன் போட்டு இருந்தாராம்.
இதனால் இயக்குனர் நினைத்தபடி சில காட்சிகள் எடுக்க முடியவில்லையாம். கோலிவுட்டில் அதிக ரசிகர் பட்டாளம் வைத்துள்ளதால் தான் நயன்தாராவை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். ஆனால் தற்போது நயன்தாராவால் தான் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என படக்குழு அப்செட்டில் உள்ளார்களாம். இதனால் நயன்தாராவுக்கு பதிலாக வேறு ஏதாவது நடிகையை வைத்து எடுத்திருந்தாலும் படம் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் என படக்குழு யோசித்து வருகிறார்களாம்.