Viral Video: நயன் இல்ல.. லூசு பெண்ணே பாடல் இந்த நடிகைய நெனச்சு தான் பாடினேன்.. சிம்பு சொன்ன பதில்.. யார் தெரியுமா ?

டி ராஜேந்தர் அவர்களின் மகனான சிம்பு குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வருபவர். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், காதல் அழிவதில்லை, தம், அலை தொடங்கி நிறைய படங்களில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன், வானம் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.
சில பல பிரச்னைகளால் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக மாறிய சிம்பு, உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் செம பிட்டாக இருப்பதை பார்த்து பலரும் ரசித்தனர். அப்படம் பெரும் கம்பேக் ஆக அவருக்கு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சிம்பு, சின்னத்திரையிலும் பிரபலம் ஆனார் . சமீபத்தில், இவர் நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்து ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிம்பு அடுத்ததாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். மேலும் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சிம்பு நடிப்பில் வெளியான படங்களில் ‘வல்லவன்’ இளசுகள் மத்தியில் இன்றும் பிரபலம். இப்படத்தில் இடம்பெற்ற ‘லூசு பெண்ணே’ பாடல் இளசுகளுக்கு இன்றும் மிக பேவரைட். யுவன் ஷங்கர் இசையமைத்திருந்த இப்பாடலை சிம்புவே எழுதி, பாடியிருந்தார். அன்று முதல் இன்று வரை சிம்பு என்றால் கண்டிப்பாக அனைவருக்கும் இந்த லூசு பெண்ணே பாடல் நினைவுக்கு வரும்.
இந்நிலையில், இந்த பாடலை பிரபல தமிழ் நடிகை ஒருவரை நினைத்து தான் சிம்பு எழுதி உள்ளாராம். அப்படம் வெளியான சமயத்தில் சிம்பு - நயன்தாரா காதல் கதை மிகவும் பேசப்பட்டு வந்தது. இதனால், நயன்தாரா நினைத்து தான் இப்பாடல் அவர் எழுதியிருப்பார் என பரவலாக அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது.
ஆனால், அப்படி ஏதுமில்லை, திரிஷாவை நினைவில் வைத்து தான் நடிகர் சிம்பு அப்பாடல் எழுதினாராம் இதனை ஒரு பேட்டியில் விளையாட்டாக சிம்பு இப்படி கூறிவிட்டு அதன்பின் சும்மா தான் சொன்னேன் என்று கூறியுள்ளார் சிம்பு. பல வருடங்களுக்கு முன் எடுத்த இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Oho apo @trishtrashers is the #looseponnu
— Zaara (@Zaara_writes) October 2, 2022
😬 @SilambarasanTR_
Nostalgic to see these videos ❣️🔥
Come for insta live 🥺🤗❣️ Fans request #silambarasan pic.twitter.com/Jtcv6JyWqf
He he appo #Trisha thaan andha #LoosuPenne pola 😁😍
— VCD (@VCDtweets) October 4, 2022
Nostalgic #SilambarasanTR 🤩👌pic.twitter.com/ZCft21YVdX