Viral Video: என்ன சொன்னீங்க? விக்ரமை பார்த்து கெட்ட வார்த்தை சொன்னாரா த்ரிஷா.. வைரலாகும் வீடியோ !
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, நேற்று (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்று திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை, எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே, கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அசர வைத்துள்ளனர்.
இப்படம் கோடி கணக்கில் உலகமெங்கும் வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது. இப்படம் குறித்து பிரபல திரையுலகினரும், ரசிகர்களும் கொண்டாடி பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது, இவர்கள் ப்ரோமோஷன் போது பங்கேற்ற வீடியோ பதிவு ஒன்று செம வைரலாகி வருகிறது.
ப்ரோமோஷன் போது த்ரிஷா, விக்ரமை பார்த்து கெட்ட வார்த்தைகளில் திட்டியதாக ஒரு வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. இந்தியில் நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பின்னணியில் பாடல் ஓட முன்னாள் இருப்பவர் சொல்லும் வார்த்தைகளை சரியாக கேட்டு பின்னால் இருப்பவருக்கு சொல்ல வேண்டும் என்பது டாஸ்க்.
இதில் முன்னாள் இருந்த சோபிதா ”குத்தா” என்ற வார்த்தையை சொல்ல அதை திரிஷா, பின்னால் இருந்த விக்ரமுக்கு சொல்ல முயன்றார். ஆனால், திரிஷாவின் உதடு அசைவை பார்க்க ஏதோ கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. இதை கண்டதும் விக்ரம் அதிர்ச்சியாகும் வீடியோ ஒன்றுதான் தற்போது வைரல் ஆகி வருகிறது.
@chiyaan.. 😜🔥#Varisu @actorvijay #Beast pic.twitter.com/NBnXqbhqUf
— Jiven ツ (@VijayGeek) October 4, 2022
🤣🤣🤣🤣Nov #Chiyaan na #PonniyinSelvan1 | #KapilSharma https://t.co/I1TJvr1iu3 pic.twitter.com/zdZYFRQNv6
— Anbarasuᴷᵃᵛⁱⁿ ⁱⁿ ᴰᵃᵈᵃ👶 (@anbarasu_Boss) October 4, 2022
Thalaivan Nam Inam 😂🤣🔥pic.twitter.com/hqGuOMUWYv
— RamKumarr (@ramk8060) October 4, 2022