'அந்த ஒரு நிமிட உரையாடல்..' ரஜினியின் வாழ்த்தால் நெகிழ்ந்து போன ஜெயம் ரவி.. வைரல் பதிவு !

rajinikanth praised jayam ravi for his role in ponniyin selvan part 1

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, நேற்று (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

rajinikanth praised jayam ravi for his role in ponniyin selvan part 1

சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.

rajinikanth praised jayam ravi for his role in ponniyin selvan part 1

பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்று திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

rajinikanth praised jayam ravi for his role in ponniyin selvan part 1

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை, எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே, கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அசர வைத்துள்ளனர்.

rajinikanth praised jayam ravi for his role in ponniyin selvan part 1

இப்படம் கோடி கணக்கில் உலகமெங்கும் வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது. இப்படம் குறித்து பிரபல திரையுலகினரும், ரசிகர்களும் கொண்டாடி பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த பின், இப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியை அழைத்து வாழ்த்தி உள்ளார்.

rajinikanth praised jayam ravi for his role in ponniyin selvan part 1

இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “அந்த ஒரு நிமிட உரையாடல் என்னால் மறக்க முடியாதது. எனது வாழ்க்கைக்கு புது அர்த்தத்தை சேர்த்தது. உங்களது அன்பான வார்த்தைகளுக்கும், உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. நீங்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும், எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Share this post