ஷூட்டிங்கில் நயனும் சிம்புவும் இப்படிலாம் பண்ணினாங்க.. தயாரிப்பாளர் போட்டுடைத்த உண்மை..!
சிம்பு - நயன்தாரா காதல் கதை குறித்து திரையுலகினர் அனைவரும் அறிவர். நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சிம்பு காதலித்து, அந்த காதல் தோல்வியில் முடிந்த கதை வரை அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். இவர்களைப் பற்றிய பல கிசுகிசுக்கள் வேகமாக பரவி வந்தன. அதை நிரூபிக்கும் வகையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களும் வெளியாகின.
இப்படி வல்லவன் படத்திற்கு பிறகு, சிம்புவும் நயனும் இணைந்து நடித்த திரைப்படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தின் தயாரிப்பாளரான பி.எல்.தேனப்பன் சமீபத்திய பேட்டி ஒன்றில், ஷூட்டிங்கில் இவர்கள் செய்த செயல் குறித்து நீண்ட நாள் ரகசியத்தை கூறியுள்ளார். பொதுவாக பி.எல்.தேனப்பன் தனது போனை யாரிடமும் கொடுக்க மாட்டாராம்.
ஆனால் நயன்தாரா மிகவும் நெருக்கமானவர் என்பதால் ஒரு நாள் இரவு நயன்தாரா அவரது போனை வாங்கியிருக்கிறார். நயனும் சிம்புவும் சேர்ந்து அந்த போனில் இருந்து நடிகை கோபிகாவுக்கு ‘ஐ லவ் யூ’ என மெசேஜ் செய்துவிட்டு பின்னர், குறுஞ்செய்தியை பின்னர் அழித்தும் விட்டனர். மறு நாள் கோபிகா பி.எல்.தேனப்பனிடம் ‘ஏன் சார் அப்படி ஒரு மெசேஜ் அனுப்புனீங்க?’ என கேட்டுள்ளார்.
அதற்கு அவர் சத்தியமாக நான் இல்லை என்று சொல்லிவிட்டு யோசித்துள்ளார். அப்போது தான் சிம்புவும் நயனும் சேர்ந்து தன் போனில் இப்படி செய்ததை தெரிந்து கொண்டாராம். நயன் அடிக்கடி இந்த மாதிரி சேட்டைகள் எல்லாம் செய்வார் எனவும் பி.எல்.தேனப்பன் கூறியுள்ளார்.