7 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் ஸ்ரேயா திரைப்படம் !

Shriya saran to act as madhumathi in kabzaa movie

எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மழை, திருவிளையாடல் ஆரம்பம், கந்தசாமி என பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். ஹிந்தி, தெலுங்கு, தமிழ்,மலையாளம் என 50திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

Shriya saran to act as madhumathi in kabzaa movie

நல்ல வரவேற்பு கிடைத்து வந்த சமயத்திலேயே தனது நீண்ட நாள் காதலரான ஆண்ட்ரு கொசசேப் என்பவரை திருமணம் செய்து இவர்களுக்கு தற்போது குழந்தை ஒன்றும் உள்ளது.

தற்போது, நரகாசூரன் மற்றும் சண்டக்காரி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள ஸ்ரேயா, பேன் இந்திய லெவல் 7 மொழிகளில் வெளியாகவிருக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மதுமதி / கப்ஸா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கன்னட நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆர். சந்துரு இயக்கும் இப்படத்தில் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.

Share this post