'ஜெயிலர்' படத்தில் இணைந்த முக்கிய பிரபல நடிகர்.. வெளியான அல்டிமேட் புகைப்படம்..

shivarajkumar to be part of jailer movie shooting photo revealed

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

shivarajkumar to be part of jailer movie shooting photo revealed

ஜெயிலர் படம் இந்த ஆண்டு தீபாளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதை எனவும், அதனால் தான் ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

shivarajkumar to be part of jailer movie shooting photo revealed

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சிறையில் தான் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

shivarajkumar to be part of jailer movie shooting photo revealed

இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், விரைவில் ஷூட்டிங் பணிகளை முடித்து, தமிழ் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. யோகி பாபு, தரமணி நடிகர் வசந்த் ரவி, மலையாள நடிகர் விநாயக், ரம்யா கிருஷ்ணன், தமன்னா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

shivarajkumar to be part of jailer movie shooting photo revealed

இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஜெயிலர் படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ள தகவலை புகைப்படம் அறிவித்துள்ளது படக்குழு. மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சகோதரரும், நடிகருமான சிவராஜ்குமார் தான் இந்த படத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே சிவராஜ்குமார் இந்த படத்தில் நடிக்க உள்ள தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இவர் செம்ம மாஸாக உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ரஜினி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

shivarajkumar to be part of jailer movie shooting photo revealed

Share this post