'மொட்ட அடிச்சிருக்கனும்.. பேசாம shave பண்ணிருக்கணும்' ஷிவினை மோசமாக பேசிய அசீம்.. வீடியோவால் எழும் கண்டனங்கள்!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
கமல் வார்னிங் கொடுத்ததால் கடந்த இரண்டு வாரங்களாக சைலண்டாக இருந்து வந்த அசீம், வேதாளம் முருங்க மரம் ஏறுன கதை போல் தற்போது மீண்டும் போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, தேவையற்ற வார்த்தைகள் உபயோகிப்பது போன்றவற்றை செய்து வருகிறார். இதிலும், கடைசியாக கொடுக்கப்பட்ட ராஜா ராணி டாஸ்க் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்க விக்ரமன் மற்றும் அசீம் சண்டை போட்டுக்கொண்டனர்.
பின்னர், படைத்தளபதியான அசீம் மற்றும் ரட்சித்தாவை தனித்தனியாக அழைத்து அரசகுடும்ப கஜானாவை திருடி நிரப்பும் டாஸ்க்கை கொடுத்திருந்தார் பிக்பாஸ். மேலும் அந்த டாஸ்கில் இவர்கள் இருவரும் மற்ற போட்டியாளர்களுக்கு தெரியாமால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொருட்களை ஒரு உதவியாளரின் மூலம் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை திருடி வீட்டிற்கு வெளியில் இருக்கும் குகைக்குள் போட வேண்டும் என்பது டாஸ்க்.
இந்நிலையில் ரட்சிதா மற்றும் அசீம் கலந்து பேசி போட்டியாளர்களில் ஒருவரான ராமிடம் இந்த திருடும் வேலையே ஒப்படைத்தனர். ராம் பல தந்திரங்களை செய்து பொருட்களை திருடி பல பொருட்களை வெளியில் இருக்கும் குகைக்குள் சேர்த்தார். ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் பொறுக்காத ராஜா ராபர்ட் ராமை கயிற்றால் கட்டிப் போடும்படி உத்தரவிட்டார். இதனால் ராம் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியில் கட்டிபோடப்பட்டு காவலாக இளவரசனான மணிகண்டன் மற்றும் படைத்தளபதி அசீம் காவல் காத்தனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலேயே எல்லோருக்கும் மிகவும் பிடித்த போட்டியாளர் என்றால் அது ஷிவின்தான். இவர் எப்போது எல்லாரிடமும் அன்போடு பழகுவார். அதுமட்டுமில்லாமல் எப்போது சொல்லவந்த கருத்துக்களை தைரியமாக சொல்லும் இவரை மற்ற போட்டியாளர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று ஒரு டாஸ்கில் கூட இவருக்கு அதிக பச்சை முத்திரை கொடுத்திருந்தனர். இப்படிப்பட்ட ஷிவினை தற்போது போட்டியாளரான அசீம் இவருக்கு மொட்டை அடித்து விடலாமா என சொன்னது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
இதற்கு முன்னர் ஏற்கனவே ஷிவினை உருவக்கேலி செய்திருந்த அசீம் மீது அதிக விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமலஹாசன் கூட பாஸ் கடுமையாக திட்டி ஷிவினிடம் மன்னிப்பு கேட்க சொன்னார். இந்நிலையில் மீண்டும் ஷிவினுக்கு மொட்டை அடித்து விடலாம் என்று உருவாக்கேலி செய்து பேசியிருக்கிறார். இவர் இப்படி பேசியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து திட்டி வருகின்றனர்.
The act of shaving a woman’s hair in the olden days symbolically removes a part of their identity & attempts to control women.
— Raja 👑 (@whyrajawhy) November 18, 2022
My blood boils after #Azeem saying “#Shivin-ku motta adichi vidanum”
This lowlife shld be stripped naked & stoned in the public. 🤬#BiggBossTamil pic.twitter.com/65Luk1pQTD