தன் சிரிப்பை கேலி செய்த விஜய் டிவி பிரபலங்கள்.. சசிகுமார் அதுக்கு சொன்ன பதில் தெரியுமா?
2008ம் ஆண்டு சசிகுமார், ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிப்பில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் சுப்ரமணியபுரம். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, சுந்தரபாண்டியன், குட்டி புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, கொடிவீரன், வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத்தேவா, பேட்ட, நாடோடிகள் என பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஈசன் திரைப்படத்தை இயக்கினார். தற்போது, நானா, Common Man, நான் மிருகமாய் மாற, காரி போன்ற திரைப்படங்களில் விரைவில் இவை வெளியாகவுள்ளது. இப்படி பிரபல இயக்குனராக பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிய சசிகுமாரை பல சின்னத்திரை மிமிக்ரி கலைஞர்கள் அவரை போல பேசி கலாய்த்து வருவதுண்டு. இந்நிலையில் தான் மா.கா.பா மற்றும் டிஎஸ்கே போன்ற காமெடி கலைஞர்கள் கலந்து கொன்றிருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது நடிகர் சசிகுமாரை போல தொகுப்பாளராக பிரியங்கா சிரித்து காட்டியிருந்தார்.
மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பல முறை தொகுப்பாளரான பிரியங்கா, சசிகுமாரை போல சிரித்து காட்டி கலாய்த்துள்ளார். இந்நிலையில், பிரபல செய்தி சேனலுக்கு இயக்குனர் சசிகுமார் கொடுத்த பேட்டியின் போது செய்தியாளர் நீங்கள் சிரிப்பதை போல பல மிமிக்ரி கலைஞர்கள் சிரித்து கேட்டிருக்கிறறோம் அதே போல இப்போது சிரிக்கிறீர்களா என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சசிகுமார் `நாடோடிகள் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நான் நன்றாக சிரிக்க வேண்டியதிருந்தது. ஆனால் எனக்கு சிரிப்பே வரவில்லை அதனால் நமோ நாராயணன் என்ற காமெடியன் சிரிப்பதை போல நான் சிரித்திருந்தேன் என்று அது என்னுடைய சிரிப்பே கிடையாது என்றும் கூறினார். மேலும் மிமிக்ரி கலைஞர்களில் சில பேருக்கு என்னுடைய குரல் வரவில்லை என்றதால் இந்த சிரிப்பை சிரித்து வைரலாக்கி விட்டனர். நானும் சிரிப்புதானே யார் சிரித்தால் என்னவென்று கண்டுகொள்ளவில்லை’ என்று கூறினார்.
மேலும் ஒரு செய்தியாளர் உங்களை போல மற்றவர்கள் பேசி கிண்டலடிப்பது வருத்தமாக இல்லையா என்று கேட்டதற்கு தான் வருத்தப்படவில்லை என்று கூறினார் சசிகுமார். மேலும் அவர்கள்தான் நான் யாரென்று தெரியாத மற்றவர்களுக்கு என்னை கொண்டு சேர்க்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் என்னை போல பேசுவது டிஎஸ்கே போன்ற சிலபேர் மட்டும்தான் என்னவே நான் நாடோடிகள் படத்தில் சிரித்தது வைரல் ஆகியதால் அதனை போன்று செய்கிறார்கள் என்று கூறினார்.