விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மனைவியாக ஷிவானி.. தீயாய் பரவும் காட்சிகள் !

Shivani narayanan in vikram movie as vijay sethupathi wife

4 வருட இடைவெளிக்கு பிறகு, கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் இயக்குனர். அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

Shivani narayanan in vikram movie as vijay sethupathi wife

தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Shivani narayanan in vikram movie as vijay sethupathi wife

இப்படத்தில், கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி, நரேன், அர்ஜுன் தாஸ், மஹேஸ்வரி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய பாகத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் இப்படத்தின் டர்னிங் பாய்ண்ட் என கூறி இருந்தனர்.

Shivani narayanan in vikram movie as vijay sethupathi wife

மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் ஆரவாரத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது. போதைப்பொருள் தொழில் செய்யும் விஜய் சேதுபதி, சீக்ரெட் ஏஜென்ட்டாக கமல் ஹாசன், கமல் வளர்ப்பு மகனாக காளிதாஸ், உளவாளியாக பகத் பாசில் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை நேர்த்தியாக தந்திருக்கின்றனர்.

Shivani narayanan in vikram movie as vijay sethupathi wife

இப்படத்தில் சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியானது. இவரது கதாபாத்திரம் குறித்து ஷிவானி ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். பகல் நிலவு என்னும் பிரபல தொடரின் மூலம் அறிமுகமாகி முதல் சீரியல் தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர் ஷிவானி.

Shivani narayanan in vikram movie as vijay sethupathi wife

அதனைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி 3 தொடரில் கெஸ்ட் அப்பியரன்ஸ் தந்தார். ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 3 ரன்னர்-அப் வென்றார்.

பின்னர், ராஜா ராணி சீசன் 1, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற பிரபல சீரியல் தொடர்களில் நடித்தார்.

Shivani narayanan in vikram movie as vijay sethupathi wife

சீரியல் தொடர்களில் பெரும்பாலும் சேலையில் குடும்பப்பாங்கான லுக்கில் வரும் ஷிவானி, இந்த ஊரடங்கு சமயத்தில் தனது கிளாமர் காட்டி ரசிகர்களை சூடேத்தி வந்தார்.

பின்னர், இதன் மூலம் கிடைத்த பிரபலம் மூலம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் கலவையான விமர்சனங்கள் பெற்ற போதிலும், இவரது தீவிர ரசிகர்கள் இவரை கைவிடவில்லை.

Shivani narayanan in vikram movie as vijay sethupathi wife

நிகழ்ச்சி முடிந்து வெளியானவுடன், அடுத்தடுத்து அதும் பெரிய பிரபலங்கள் திரைப்படத்தில் கமிட் ஆகி வந்தார். பொன்ராம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் திரைப்படம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Shivani narayanan in vikram movie as vijay sethupathi wife

விக்ரம் படத்தில் 3 மனைவிகளுடன் போதை வாழ்க்கை வாழ்கிறார் சந்தனம். ஷிவானி நாராயணன், மைனா நந்தினி மற்றும் விஜே மகேஷ்வரி என மூன்று பேரும் விஜய்சேதுபதியின் மனைவிகளாக நடித்துள்ளனர்.

Shivani narayanan in vikram movie as vijay sethupathi wife

ஷிவானிக்கு துப்பாக்கிச் சுட விஜய்சேதுபதி சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.ஒரு பெரிய குடும்பத்துடன் வாழும் விஜய்சேதுபதி எடுத்துக் கொள்ளும் க்ரூப் போட்டோ காட்சி ஷிவானியே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார். இன்னும் சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.

Shivani narayanan in vikram movie as vijay sethupathi wife

Shivani narayanan in vikram movie as vijay sethupathi wife

Share this post