'நடிச்சது 5 நிமிஷம்.. அதுக்கே இவ்ளோ லவ்?' ‘ரோலெக்ஸ்’ கேரக்டர் குறித்து சூர்யா ட்வீட் !

Suriya expresses about rolex character in vikram movie

4 வருட இடைவெளிக்கு பிறகு, கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் இயக்குனர். அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

Suriya expresses about rolex character in vikram movie

தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Suriya expresses about rolex character in vikram movie

இப்படத்தில், கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய பாகத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் இப்படத்தின் டர்னிங் பாய்ண்ட் என கூறி இருந்தனர்.

Suriya expresses about rolex character in vikram movie

விக்ரம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியாகியுள்ளது. படத்தில் பகத் பாசில் அமராகவும், விஜய் சேதுபதி சந்தானமாகவும் நடித்துள்ளதாக தெரிவித்த படக்குழு, சூர்யாவின் கேரக்டரை சஸ்பென்ஸாக வைத்திருந்தது.

Suriya expresses about rolex character in vikram movie

இந்நிலையில், அவரின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் சூர்யா இப்படத்தில் ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அவரது பெயரோடு புகைப்படங்களும் வெளியானது. மேலும் இப்படத்தில் நீண்ட தாடியுடன் வித்தியாசமான கெட் அப்பில் நடிகர் சூர்யா கெத்தாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Suriya expresses about rolex character in vikram movie

பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.

Suriya expresses about rolex character in vikram movie

கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும், மனதில் நிற்கும்படியான ரோலில் நடித்து மிரட்டி இருக்கிறார் சூர்யா. படத்தின் இறுதியில் கைதி 2 மற்றும் விக்ரம் 3 ஆகிய படங்களுக்கு லீடு கொடுத்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் லோகேஷ்.

Suriya expresses about rolex character in vikram movie

இந்நிலையில், ரோலெக்ஸ் கதாபாத்திரம் குறித்து சூர்யா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் நடித்தது கனவு நனவானது போல் இருந்தது. இதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி லோகேஷ் கனகராஜ். ரோலெக்ஸுக்கு கிடைக்கும் அன்பை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Suriya expresses about rolex character in vikram movie

Suriya expresses about rolex character in vikram movie

Share this post