மலைவாசியாக கோவை சரளா.. பரபரப்பான காட்சிகளுடன் வெளியானது 'செம்பி' பட டிரைலர் !

Sembi film trailer has been released with different story

கோவையில் பிறந்து வளர்ந்த அஸ்வின், நடிப்பின் மீதுகொண்ட ஆர்வத்தினால், விடா முயற்சி எடுத்து சினிமா துறையில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கியவர்.

Sembi film trailer has been released with different story

இதனைத் தொடர்ந்து, ரெட்டை வால் குருவி, நினைக்க தெரிந்த மனமே போன்ற தமிழ் சீரியல் தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

மேலும், சரவணன் மீனாட்சி தொடரின் ரீமேக் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்தார்.

Sembi film trailer has been released with different story

பின்னர், பிளிங்க், சிண்ட்ரெல்லா, 3 சீன்ஸ் ஆஃப் ஹிஸ் லவ் ஸ்டோரி, காதல் ஒன்று கண்டேன் போன்ற குறும்படங்களில் நடித்தார். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் செம பேமஸ்.

விஜய் தொலைக்காட்சியில், குக் வித் கோமாளி மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த அஸ்வின், இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை அவருக்கு உண்டாக்கியது.

Sembi film trailer has been released with different story

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2வது இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி, சுனிதா, புகழ் உடன் இவரது சில காமெடி, வீடியோக்களாக இன்னும் வைரல் ஆகி வருகிறது. இதற்கு பின்னர், பட வாய்ப்புகளும் பெற துவங்கிய இவர் ம்யூசிக் வீடியோவிலும் நடித்து வருகிறார்.

குட்டி பட்டாசு, யாத்தி யாத்தி என 2 மியூசிக் வீடியோக்கள் இவர் நடிப்பில் பெரும் ஹிட் அடித்த நிலையில், பேபி நீ சுகரு என்னும் ம்யூசிக் வீடியோவில் கல்லூரி மாணவராக பேராவல் டே அன்று லாஸ்லியாவிடம் அஸ்வின் காதலை சொல்லும் ரொமாண்டிக் பாடலாக அமைந்து செம வைரல் ஆனது.

Sembi film trailer has been released with different story

ஓ காதல் கண்மணி, ஆதித்யா வர்மா போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், தற்போது, மைனா, கும்கி போன்ற வெற்றி படங்களை தந்த பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் இவர் நடிப்பதாக தகவல் வெளியானது. இதன் போஸ்டர் இன்று வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், செம்பி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மாஸ் போஸ்டர் ரிலீஸ் ஆனது.

Sembi film trailer has been released with different story

கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கோவை சரளா கெட்அப் வித்தியாசமாக இருக்கும் நிலைமையில் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியது. இந்நிலையில் செம்பி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது . டிரைலரை பிரபல இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டார்.

Sembi film trailer has been released with different story

பரபரப்பான காட்சிகளுடன் ட்ரெய்லரைப் பார்க்கும்போது, ​​முக்கியமாக படம் பேருந்தையும் அதனுடன் பிணைக்கப்பட்ட வாழ்க்கையையும் சுற்றி வருவதாக தெரிகிறது. இப்படத்தில் தம்பி ராமையா, ரேயா மற்றும் நிலா என்ற 10 வயது குழந்தை நட்சத்திரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலைவாசியாக கோவை சரளா நடித்துள்ள இந்த படத்தில் மைனா, கும்கி பட சாயல் கொஞ்சம் தெரிகிறது.

Share this post