நைட்டுக்கு அது கண்டிப்பா வேணும்.. அந்த விஷயத்திற்கு அடிமையாகிய நடிகை ஷகீலா ஓப்பன் டாக்..!
மலையாள சினிமாவில் சிறுமையாக நடிக்கும் போது நடிக்க ஆரம்பித்தவர் தான் ஷகீலா. அதுவும், கவர்ச்சி ரோலில் நடிகர்களுடன் நெருக்கமான பாலியல் காட்சிகளின் நடித்து கவர்ச்சி புயலாகவே மாறினார். பின்னர், அதிலிருந்து மீண்டு வந்த சகிலா தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார்.
சமீபத்தில் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7ல் கலந்து கொண்ட போது புகைப்பிடித்த காரணத்துக்காக இவர் எலிமினேட் செய்யப்பட்டார். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியின் போது, நான் செய்த தவறை இல்லை என்று கூறுவதால் என்ன நடக்கப்போகிறது என்றும், நான் செய்ததை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தவித பயமும் கிடையாது என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
மேலும், தான் 13 வயதில் நடிக்க ஆரம்பித்து பணம் சம்பாதித்ததால் ஒரு தெனாவெட்டு வந்துவிட்டது. அதனால், இன்னொரு நபரின் துணை வேண்டாம் என்று நினைத்து திருமணம் செய்து கொள்ளவில்லை. எல்லாத்துக்கும் மேலாக தனக்கு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதால் திருமணத்தை வேண்டவே வேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிட்டேன்.
சாதாரணமாக ஆரம்பித்த அந்த பழக்கம் என்னை அடிமையாக்கி விட்டது. தூங்கும் போது கூட மது அருந்தினால் தான் எனக்கு தூக்கமே வரும் நிலைக்கு நான் தள்ளப்பட்டு விட்டேன். இப்படி இந்த கெட்ட பழக்கம் இருக்கும் போது திருமணம் செய்து இன்னொருவரின் வாழ்க்கை கெடுத்து மகிழ்ச்சியை கெடுத்து எதற்காக என்று யோசித்தேன். அதனால், திருமணம் வேண்டாம் என்ற முடிவை எடுத்து விட்டேன் என வெளிப்படையாக தற்போது, பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.