அடேங்கப்பா.. பெரிய கோடீஸ்வரி தான் பா.. குழந்தை நட்சத்திரமா நடிச்ச விக்ரம் ரீல் மகளின் சொத்து மதிப்பு..!
பேபி சாரா என்றவுடன் நம் அனைவருக்கும் ஞாபகம் வருவதும் திரைப்படம் தெய்வத்திருமகள் தான். இந்த படம் தான் பேபி சாராவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நிலையான அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
குறிப்பாக தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது என்று சொல்லலாம். இந்த படத்தை தொடர்ந்து ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவான சைவம் படத்திலும் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து சாரா பலரையும் ஆச்சரியப்படுத்தில் ஆழ்த்தி இருந்தார். அதாவது, தெய்வத்திருமகள், சைவம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த பேபி சாராவா இது என அனைவரும் திகைத்துப் போனார்கள். அந்த அளவிற்கு பருவ மங்கையாக ஜொலித்தார். பொன்னியின் செல்வனின் நந்தினியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்ற சாரா அடுத்ததாக Quotation Gang என்னும் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், 17 வயதாகும் நடிகை சாரா குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து மட்டுமே ரூபாய் பத்து கோடி வரை சொத்து சேர்த்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.