'என் வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த..' விஜய் சேதுபதியை புகழ்ந்த ஷாருக்கான்.. ட்ரெண்டாகும் வீடியோ !

Shahrukhkhan speaks about vijay sethupathi video getting viral on social media

பெரிய பிரபலங்கள் படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

Shahrukhkhan speaks about vijay sethupathi video getting viral on social media

பின்னர், பீஸ்சா, நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் கதையில் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகி, தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மக்கள் செல்வனாக உருவாகியுள்ளார்..

Shahrukhkhan speaks about vijay sethupathi video getting viral on social media

எந்த விதமான கதைகளிலும் தயக்கம் காட்டாது நடித்து வரும் விஜய் சேதுபதி, இவர் நடிக்கும் முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்து விடுகிறது.

Shahrukhkhan speaks about vijay sethupathi video getting viral on social media

தற்போது, 2 ஹீரோ சப்ஜெக்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர்,மேலும், தற்போது வெளியாகி வேற லெவல் மாஸ் காட்டி வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்ததது என கெத்து காட்டி வருகிறார்.

Shahrukhkhan speaks about vijay sethupathi video getting viral on social media

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் 2 பெரிய ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் சந்தானம் என்ற போதை கடத்தல் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Shahrukhkhan speaks about vijay sethupathi video getting viral on social media

அனைத்து திரையுலகிலும் பான் இந்திய நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர், நயன்தாரா, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவர உள்ள ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் மும்பைக்கு சென்ற நயன்தாராவின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.

Shahrukhkhan speaks about vijay sethupathi video getting viral on social media

அட்லியின் பாலிவுட் இயக்கமான இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரல் ஆனது. இதில் புதிய தகவலாக இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஷாருக்கான், நயன்தாரா, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, சுனில் குரோவர், யோகி பாபு உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Shahrukhkhan speaks about vijay sethupathi video getting viral on social media

இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ரெடியாகி வருவதாக கூறப்படுகிறது. ஷாருக்கானின் மனைவி கௌரி கான் இப்படத்தை தயாரித்து வருகிறார். தற்போது வெளியாகிய புதிய தகவலான விஜய் சேதுபதி இந்த படத்தில் இணைவது குறித்த செய்தி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், விஜய் சேதுபதி குறித்து பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் ஜவான் படத்தின் ஹீரோவுமான ஷாருக்கான் புகழ்ந்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this post