ஸ்ருதிஹாசனுக்கு என்னாச்சு ? உடல்நலம் குறித்து பரவிய தகவலால் பதறிப்போய் வீடியோ பதிவிட்ட ஸ்ருதி

Shruthi haasan posts video about rumours spreading on internet

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற தனி அடையாளத்தை கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

Shruthi haasan posts video about rumours spreading on internet

2000ம் ஆண்டு தனது தந்தையின் சூப்பர் ஹிட் படமான ‘ஹே ராம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், 2009ம் ஆண்டு, ‘லக்’ என்னும் பாலிவுட் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழில் உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். பின்னர், சூர்யாவுடன் இவர் நடித்த ‘7ஆம் அறிவு’ படம் மூலம் மிக பிரபலம் அடைந்தார்.

Shruthi haasan posts video about rumours spreading on internet

விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ள இவர், தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். 3, வேதாளம், புலி, பூஜை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது சினிமா பயணத்தில் தனுஷ் உடன் இவர் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் இவருக்கு பெரிய மைல்கல் ஆனது.

Shruthi haasan posts video about rumours spreading on internet

சர்ச்சைக்கு பெயர்போன ஸ்ருதி, தனது கவர்ச்சி உடை, கிளாமரான போஸ் கொடுத்து போட்டோஷூட் என இணையத்தை திணறடித்து இளசுகளை திண்டாட வைத்தும் வருகிறார். இந்நிலையில், தனது மார்க்கெட்க்காக தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவவ்போது பதிவிட்டு வருகிறார்.

Shruthi haasan posts video about rumours spreading on internet

மேலும், பெற்றோரை விட்டு தனியே வசித்து வரும் ஸ்ருதி, தற்போது தனது நண்பர் ஒருவரை காதலித்து வருகிறார். அவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ என பதிவிட்டு வருகிறார்.

Shruthi haasan posts video about rumours spreading on internet

இந்நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் தான் மோசமான PCOS என்ற ஹார்மோன் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், PCOS மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றால் மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை நான் எதிர்கொள்கிறேன். இதனால், சீரற்ற மாதவிடாய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதை பெண்கள் அறிவார்கள்.

Shruthi haasan posts video about rumours spreading on internet

எனவே, இது போன்ற கடினமான சூழ்நிலைகளை கையாளுவதற்கு ஆரோக்கிய உணவு மற்றும் நல்ல தூக்கம் ஆகியவற்றை பின்பற்றுகிறேன். இந்த ஒரு சவாலான பயணம். அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். அவர் பதிவு குறித்து, அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான செய்திகள் பரவத் தொடங்கின. இந்நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுருதிஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Shruthi haasan posts video about rumours spreading on internet

அதில் அவர் கூறி இருப்பதாவது: “கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை பதிவிட்டு PCOS பற்றி பேசி இருந்தேன். நிறைய பெண்களுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. ஆமாம் இது சவாலானது தான். ஆனால் இதனால் நான் நலமின்றி இருப்பதாக அர்த்தமில்லை. என் உடல்நிலை மோசமாகவும் இல்லை.

நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதால் இது வேறுவிதமாக சென்றுவிட்டது. மருத்துவமனையில் இருக்கிறீர்களா என்று என்னிடம் நிறையபேர் கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. நான் நலமாகவே உள்ளேன். PCOS பிரச்சினை எனக்கு பல ஆண்டுகளாக உள்ளது. இருந்தாலும் நான் நலமுடன் உள்ளேன்” என கூறி உள்ளார்.

Share this post