தளபதி66 படப்பிடிப்பில் இருந்து ஷாம் வெளியிட்ட புகைப்படம் ! இப்டி எதிர்பார்ப்ப கிளப்பி விடுறீங்களே !

Shaam posts camera photo from thalapathy66 shooting spot

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தோழா படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி அவர்கள் விஜய் வைத்து இயக்கும் திரைப்படம் தளபதி66. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகவுள்ளது.

Shaam posts camera photo from thalapathy66 shooting spot

இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் ஷாம் நடிக்கின்றனர்.

Shaam posts camera photo from thalapathy66 shooting spot

விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது என்ற தகவல் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 66 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Shaam posts camera photo from thalapathy66 shooting spot

இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் யோகிபாபு நடித்து வருவதாக கூறப்படுகிறது. தளபதி66 ஷூட்டிங் பற்றி ஏதாவது ஒரு புகைப்படம் கிடைக்காத என ரசிகர்கள் ஏங்கி கொண்டிருக்க, தளபதி ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்த வீடியோ வெளியானது.

Shaam posts camera photo from thalapathy66 shooting spot

அதனைத் தொடர்ந்து, விஜய் அங்கே காரில் சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

Shaam posts camera photo from thalapathy66 shooting spot

தற்போது, அப்படத்தில் நடிக்கும் ஷாம் கேமராவை போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார்.

Shaam posts camera photo from thalapathy66 shooting spot

Shaam posts camera photo from thalapathy66 shooting spot

Share this post