சமந்தாவின் 'யசோதா' Glimpse Video.. எதிர்பார்ப்பை எகிறவிடும் திரில்லர் நிமிடங்கள் !

Samantha yasodha glimpse video getting viral

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரையுலகில் டாப் நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து, நான் ஈ, நீதானே எந்தன் பொன்வசந்தம் போன்ற படங்கள் மூலம் இளசுகளின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

Samantha yasodha glimpse video getting viral

பின்னர், 24, தெறி, மெர்சல், 10 எண்றதுக்குள்ள, போன்ற திரைப்படங்களில் டாப் நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்டோர் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் டாப் நடிகையாக வலம் வருகிறார். அதன் மூலம், நாக சைதன்யா அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

Samantha yasodha glimpse video getting viral

தற்போது, திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனார். அதன் பின்னர், தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜா கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Samantha yasodha glimpse video getting viral

தற்போது கிருஷ்ணா பிரசாத் தயாரிப்பில் ஹரி சங்கர் மற்றும் ஹரிஹரன் இயக்கத்தில் யசோதா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தெலுங்கு இந்தி தமிழ் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் படமாக வெளியிடவுள்ளனர்.

Samantha yasodha glimpse video getting viral

இதில் தமிழ் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து தற்போது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

Share this post