இதுவரை நயன் குறித்து பலரும் அறியாத ரகசியங்களை சொன்ன சரண்யா பொன்வண்ணன்..!
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, டபுள் ட்ரீட்டாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை விக்கி - நயன் தம்பதி பெற்றெடுத்தனர்.
குழந்தைகளுக்கு ‘உயிர் ருத்ரோனில் N சிவன்’ மற்றும் ‘உலக் தெய்வேக் N சிவன்’ என பெயர் சூட்டியது குறித்து அறிவித்தனர். இந்நிலையில், பலருக்கும் தெரியாத நயன்தாரா குறித்த சில தகவல்களை சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ளார்.
சரண்யா பொன்வண்ணன் பேட்டி ஒன்றில் நயன்தாரா பற்றி யாருக்கும் தெரியாத பல விஷயங்களை கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளார். நயன்தாராவை பொறுத்தவரை அவர் முன்னணி நடிகையாக மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் கொண்டு இருந்தாலும், எப்போதுமே மிகவும் சாதாரணமாக பழகக்கூடிய சிறந்த நபர்.
தன்னை யாராவது எதிரியாக நினைத்தால் கூட, அவர்களிடம் இருந்து மிகவும் சைலன்டாக ஒதுங்கி விடுவாராம். அதற்கு காரணம் அகங்காரம் இல்லை, அவர்களை சமாளிக்க முடியாது என்று நினைத்து விலகி விடுவாராம். அதேபோல் நயன்தாரா யாரிடமாவது பேசுவதை தவித்தால், அவர் நிச்சயம் ஒரு கெட்டவராக தான் இருப்பார் என்றும்… நயன்தாரா தன்னை பற்றியும் தவறாக பேசுபவர்கள் பற்றி எப்போதுமே கண்டு கொள்ள மாட்டார் என தெரிவித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன்.