'சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு..' நமீதா வீடியோவால் கிளம்பிய சர்ச்சை.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!
சிறு வயது முதலே மாடலிங்கில் ஈடுபட்டு வந்த நமீதா, நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம், இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வர தொடங்கியது.
தெலுங்கு திரைப்படங்கள் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த நமீதா, எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
மஹா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், சாணக்யா, கோவை பிரதர்ஸ், ஆணை, பம்பரகண்ணாலே, தகப்பன்சாமி, நீ வேணுண்டா செல்லம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர், வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பெருமாள் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதன் நடுவே, மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
இப்படி இருக்க, 2017ம் ஆண்டு தனது நீண்ட நாள் தோழரான வீரேந்திரா என்பவரை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தது. இந்நிலையில், நமீதா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “பெருமைமிக்க பாரத நாட்டில் வாழ்கின்ற தொன்மையான தமிழர்களாகிய நமது புத்தாண்டு என்பது வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தான். நிச்சயமாக ஜனவரி 1 புத்தாண்டு கிடையாது. அது நமது கலாச்சாரமே கிடையாது. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று பேசி வீடியோவை பதிவிட்டு இருந்தார்.
இதைப் பார்த்த பலர் நமீதாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் தை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு என்று கூறி வரும் நிலையில், திராவிடர்களுக்கு தான் தை ஒன்று புத்தாண்டு, ஆனால் தமிழர்களுக்கு சித்திரை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு என்று பதிவிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலரோ தமிழர்களுக்கு தை ஒன்றுதான் தமிழ் புத்தாண்டு என்றும் பதிவிட்டு வருகின்றனர். நமீதாவின் இந்த பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. நமீதா ஜனவரி 1 புத்தாண்டு கிடையாது ஏப்ரல் 14 தான் தமிழ் புத்தாண்டு என்று கூறியிருப்பது அவர் இருக்கும் பாஜக கட்சியின் நிலைப்பாடு என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றார். மேலும் குஜராத்தில் பிறந்துவிட்டு தமிழ் வருடப்பிறப்பு பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறாயா? என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.